விரல்நுனி உலகம்

தொட்ட நொடி கைசேரும்
மென்பொருள் குவியல்!
தட்டிவிட்டால் பணம்
மாறும் இணையச் சேவை!
உடல் கெட்டுவிட்டால்
ஆலோசிக்க திரை
மருத்துவம்!
கட்டிணைக்கும்
கயிறாகும் உலக நட்பு!
மட்டிடவே
துயர்த்தொல்லை
யாண்டுமிங்கு-கட்டளை
பணியாளாய் பொலியும்
கணினி!!
அற்றமிலா ஞானம்தரும்
தொலைத்தூரக் கல்வி!
குற்றமற களைந்தெறியும்
மென் திறனூடாய்
செற்றமற கைக்கொள்ளும்
வியூகமதில்
முற்றுமுதற்
விண்ணாளும் வெளி
கோள் பாய்ச்சல்!அலுத்து
வரும் சுற்றமதை கை
குலுக்கியழைத்து...
அன்புடனே உணவிட்டு
வயிறு புடைக்க கண்டு-
விரல்விட்ட, கிளைவிட்ட
உறவின்முறையதை
அனந்த
தலைமுறை கடத்தி...
உயிரும் உடலுமாம்
இமைக்குள் காதல்-
கைவிட்ட நொடி
மனிதம் மாண்டு-
விண்ணாள
யத்தனிக்கும் விஞ்ஞான
யுக-விரல் நுனியில்
சுழன்று வரும்
புதிருலகம்!!!
********************

எழுதியவர் : Daniel Naveenraj (15-Jan-16, 8:07 pm)
பார்வை : 129

மேலே