அலங்கா நல்லூர் அற்புதம்

ஜல்லிக்கட்டுப் புகழ் ஜல்லிக்கட்டு…..
நம்ம அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு…. !
ஆயிரகணக்கில் ஜனங்கள் கூடிக்கிட்டு
வேடிக்கைப் பார்க்கும் வீர விளையாட்டு !

மதுரை மாவட்டத்தின்ப் பெயரைச் சொல்ல
காளை - ஜல்லிக்கட்டு ஒன்றேப் போதுமடி !
வெளி நாட்டவரின் நெஞ்சில் நின்று
நம்ம அலங்காநல்லூர் புகழ் பாடுமடி !

வண்ணாத்தி மாட்டுக்கு மவுசு இங்கே
சொல்லத்தான் முடியாதப் பேருங்க !
அண்ணாத்த எல்லோரும் தாவிங்க
அடக்கத்தான் முடியாமப் போறாங்க !

ஆனை தந்தம்ப்போல் மாட்டு கொம்புங்க
அசந்தா அத்தனைப் பேரையும் முட்டுங்க !
வாலைப்பிடித்து இழுத்து அடக்குனா…
அவன் சுத்த, மா.. வீரன் இல்லீங்க…!

கல்த்தூணைப் போல இளங்காளை
செங்காளை முன்னே நிக்கிறான் !
நிப்பவன் கண்ணில் மண்ணைத்தூவி
செங்காளை பறக்குதேப் புயலாக !

காங்கேயம் காளைக்கு இணையாக
பாருக்குள்ளோ வேறக்காளை இல்லீங்க !
பெருங்காயம் கலந்த லேகியத்தை
ஆரோக்கியம் கருதி கொடுப்பாங்க !

காளை கத்திக்கொண்டே ஓடும்போது- ஒருத்தன்
அதன் கொம்பைப் பிடித்துக் கொண்டே ஓடுறான்
காளை கண்டப்படி திமிறி எகிறுவதால்
அவன் அந்தர் பல்ட்டி அடிக்கிறான் !

வில்லாதி வில்லனொருவருன் வீரமிகு காளையை..
அடக்கி மடக்கி பிடித்துவிட்டால் – அவனை
அத்தனைப் பேரும் வாழ்த்துறார் ! அண்டா முதல்
அடுக்கு வரை அன்புப் பரிசு அளிக்கிறார் !

தமிழர்களின் வீர விளையாட்டு – அதற்கு
தடைப்போட்டு இருக்குதே சுப்ரீம் கோர்ட்டு
ஈராயிரமாண்டு தமிழ் கலாச்சாரம் – அதை
சீண்டிப் பார்க்குதே அரசியல் விபச்சாரம்

மரத்தமிழா உன் ஒற்றுமை எங்கேப் போனது….?
மக்களைத் திரட்டி மாநகர் டில்லிக்குப் படையெடு!
மத்திய மாநில அரசே விரைந்து தலையிடு
மிருகவதை சட்டத்தை திருத்தி அமைத்திடு..!

ஜல்லிக்கட்டு ஒன்றும் ஜில்லாக் கேடியல்ல - அது
ஜனங்களை கொள்ளும் கோரப் போட்டியல்ல;
வெளிநாட்டுக்காரரை தாய்நாட்டுக்கிழுத்து
அந்நிய செலவானி ஈட்டும் - செல்லப்பிராணி ஆட்டம்!

மிருகநல விரும்பிகளே! உங்கள் கருணையுள்ளம்
பெருமைக்குறிய செயல்களே..! எங்கள் தமிழர்களின்
உணர்வுக்கு ஊக்கமளித்து உதவுங்களேன்..! வந்தாரை
வாழவைக்கும் தமிழகம் உங்களை நன்றிமறக்காது அன்பர்களே..!

எழுதியவர் : இரா.மணிமாறன் (15-Jan-16, 5:27 pm)
பார்வை : 91

மேலே