புன்னகை

இது ஒரு
புன்னகை தேசம் !

ஈர
இதயங்களின்
உதடுகள் பூத்த
அழகான
இனிய மொழி !

வாழ்வின்
அர்த்தப் படுத்தலில்
சந்தோசத்தின்
தலை வாசல் !

இயற்கையின்
கொடையில்
இதுவும் ஒரு
பூவின் வாசனை !

இந்த உதடுகள்
திறக்கப்பட்டால்.....
பல துன்பங்கள்
பறந்து செல்லத்
துடிக்கும் சிறகு !

விரிந்து கரையும்
ஒவ்வொரு புன்னகையும்
மனவீட்டை
மீண்டும் பிரகாசிக்க
வைக்கும்
வெள்ளையடிப்பு !

இந்த ரோஜாக்கள்
சிரித்துக் கொள்வதால் தான்
முட்கள் கூட
அதைக் காத்து
நிற்கிறது போலும் !

இந்த உலகம்
முழுவதும்
உள்ள பூக்கள்
ஒன்றாகப் பூக்கட்டுமே. ...
இந்த குழந்தைகளின்
புன்னகையை
மிஞ்சி விடுமா. ...?

ஒரே ஒரு
புன்முறுவல். ......
காதலின்
பன்னீர் தெளிப்பு !

மரணத்தின்
சொர்க்க வாசலின்
காலாவதியான
அழைப்பிதழ் !

மானிட
மனங்களில் மட்டும்
கொடுக்கப்பட்ட
அன்பளிப்பு !

இந்த
ஆனந்தக் கண்ணீர்கள்
ஒரு போதும்
உப்பாக
இருப்பதில்லையே.............!!!

- பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (16-Jan-16, 12:51 am)
Tanglish : punnakai
பார்வை : 266

மேலே