புது யுகம்
கனவுகள் பல மெய்தாலும் ,
நிஜங்கள் பல பொய்த்து போயின !!
கண்ணாடி அழகன்று எண்ணி
அதற்குள் அடை பட்டுகொண்ட ஓர்
வாழ்கை !!...
நகரமென்று நரகத்துக்கு
வந்ததோர் பெயர்
வளர்ச்சி!!...
நாட்கள் சென்ற பின்
ஏக்கங்களை மட்டும்
சேகரித்து கொண்ட ஓர்
முதிர்ச்சி!!...
வாழ்த்தும் , வருத்தமும்
தெரிவிக்க ஓர்
துடிபற்ற முயற்சி!...
சிந்தனையை தொலைத்து
சாதிக்க நினைக்கும் - ஓர்
சந்ததி!!..
இதயம் வென்ற உறவை
மறக்க செய்த , ஓர்
இயந்திர மனிதனின்
அறிமுகம்!!...
உள்ளகளிப்பை உணராமல்
நாள்தோறும் - ஓர்
செயற்கை புன்னகை!!...
பிழைப்புக்கென வந்ததாலே
பிழைகளை கண்டு கொல்லாத - ஓர்
பயணம்!!
யாரை காப்பாற்ற
இப்படி உருவாகிறது
ஓர் யுகம்?!...