நாம் நீயும் நானும்

உனக்காக நான் எழுதும் ஒவ்வொரு வரியும் என் அன்பை உனக்கு எடுத்து சொல்லும்..!
உன்னை காணும் ஒவ்வொரு முறையும் என்னை அறியாமல் ஒரு புன்னகை தொட்டு செல்லும் ..!
உன் விழிகளுக்கு உரைக்க சொல்லுவேன் நீ என்னுடையவன் என்று..ஆனால் அது உன் விழிகளுக்கு புரிவதில்லை....!
உன் புன்னகைக்கு சொந்தக்காரி நான் அதற்காக வானத்தை கூட எட்டி பிடிப்பேன்....!
உன் தலை முடி ஒவ்வொன்றும் என் விரல்கள் பட காத்திருகின்றது ..!
உன் மீசையை தடவி சிறிது முறுக்கி விடுவேன்..!
முத்தங்களால் உன் இதழை நனைதிடுவேன்..!
உன் இதயத்தின் துடிப்பாய் நான் மாறிட என் உடலின் உயிராய் நீ உருவெடுபாய் ..!
உன் மூச்சு காற்று என்னை தொட்டு செல்ல என் வெட்கத்தின் உச்சம் அடைவேன் ..!
உன் விரல் என்மேல் பட உன்னை அனைத்து கொள்வேன் நீ தான் என் உலகமென்று....!
விரல்கள் கோர்க்கும் போது உன்னுள் நான் என்னுள் நீ என்பது மெய்யாகும் ..!
உன் விழிகளின் தேடலும், மௌனமும், ஆசைகளும் நானாவேன்..!
நீ எதிர்த்து போராடும் போது உன்னக்குள் இருக்கும் தைரியத்தின் வடிவமாவேன் ..!
உன் வெற்றியின் மகிழ்ச்சி ஆவேன்..!
உன் வலியின் ஆறுதல் ஆவேன்..!
நம் உறவின் உட்சம் நீ அதன் கருவறை நான்.....!

எழுதியவர் : நான்சி வின்சென்ட் (17-Jan-16, 6:18 pm)
பார்வை : 318

மேலே