யாரோ அவன் - நிரலன்
![](https://eluthu.com/images/loading.gif)
யாரோ அவன்,
என்னுள் காதலை தூண்டியவன்,
என்னை வேதனையில் கிடத்தியவன்,
பின் ஆறுதலும் கொடுத்தவன்!
யாரோ அவன்,
என் தனிமைகளை நிரப்புகிறவன்,
என் சாபங்களுக்கு ஆளானவன்,
எனை உளற வைப்பவன்!
யாரோ அவன்,
பெயரோ 'யுவன்'.
'இது காதலா' என்றான்...
நான் விழுந்தேன்
அவளோடு காதலில்,
அவள் எனை வேதனையில் கிடத்த,
பாடுகிறான் யுவன்
'காதலே... காதலே.. எங்கு போகிறாய்' என்றே...
பின் ஆறுதலாய், 'காட்டுக்குள்ளே மழையை போல' - என
எனை அழைத்தும் செல்கிறான்
அவளும் அங்கே இருக்கிறாள்...
'கனவே களைகிறதே' என
என் தனிமைகளை நிரப்பியும்,
என் வாழ்வினை எட்டி பார்த்து பாடியே
என் சாபமும் பெறுகிறான்...
எனை பாடவும் வைத்து,
உளறவும் வைக்கிறான்
'உலலேலே...'
ஒவ்வொரு முறையும்,
நான் அவளுக்கான பாடல் தேடுகிறேன்,
யுவனே அதை இசைத்தும் விடுகிறான்...
'உனக்காக தானே இந்த உயிர் உள்ளது'
நான் அவளுக்கு பாடுகிறேன்,
யுவன் எனக்கு பாடுகிறான்...
அவள் காதல் வார்த்தைகள் செய்யாததை,
யுவன் இசை செய்கிறது...
'வெண்ணிற இரவுகள், காதலின் மௌனங்கள்...'
இப்படியாகவே என் இரவுகள்
வெண்ணிறமாகிறது...
கடைசியில்,
'ஏதோ ஏதோ எண்ணங்கள் வந்து
எனக்குள் தூக்கம்...' போடுகிறது...