காதலின் உச்சம் தந்தவனே

காதலின் உச்சம் தந்தவனே

என்னவனே என்னில் புதைந்தவனே
ஏங்குகிறேன் என் பெண்மை தாய்மையானதைக்கூற...

உன் உயிரை நமக்கென தந்தவனே
உன்னால் இந்நிமிடமே முழுமையாய் பிறந்துவிட்டேன்...

என் நிமிடங்களை அழகாக்கியவனே
உன்னிடம் சொல்லத்துடிக்கும்
இந்நிமிடத்தை கடக்க ஏன் என் பொறுமை வேகம் இழக்கிறது...

கண்ணான கணவனே
வாசலோடு ஒன்றிவிட்டேன் நீ வரும் பாதை பார்த்து பார்த்து...

உனக்கிதைக்கூறி உன்னானந்தம் நான் காண்பேனே
தரத்துடிக்கும் என் முத்தங்களை என்ன சொல்லி பூட்டி வைப்பேன்...

அடிக்கடி குழந்தை கேட்டு என்னை வெட்கப்பட வைப்பவனே
இன்று உன் வெட்கப்படும் அழகு ரசிக்க காத்திருக்கிறேன்...

காதலின் உச்சம் தந்தவனே
இன்று என் காதலின் உச்சத்துடன் மிச்சமும் சேர்ந்திருக்கிறது..

இன்று வயிறு நிறையும்படி தந்தவனே
நாளை தந்தையாய் தாலாட்டு என்னோடு சேர்ந்து நீயும் பாட வா...

வாசலில் உன் காலோசை கேட்டு இன்னமும் சிவக்கிறேன்
உன் முகம் கண்டத்தில் இன்னமும் மிதக்கிறேன் ஆனந்தத்தின் உச்சத்தில்...

எழுதியவர் : பர்ஷான் (18-Jan-16, 2:52 pm)
பார்வை : 386

மேலே