இசை பாடும் தூண்கள்
பா :--
திசை ஒளிர நிற்கும் வடிவழகில் காந்திமதி
இசை பிறக்க நிற்கும் எழுசுரத் தூண்கள்
திசை அணி இசைவடிவோன் நிற்கும் புகழ் நெல்லை !
வெண்பா --சிந்தியல் :--
திசைஒளிர நிற்கும் காந்திமதி அன்னை
இசைபிறக்க நிற்கும் எழுசுரத் தூண்கள்
திசைஅணிவோன் நிற்கும்நெல் லை !
கவிக் குறிப்பு : கவிப்பிரிய தஞ்சை குணாவின் நெல்லைத் தூண்கள் பற்றிய
தகவலைப் படித்த போது மலர்ந்த கவிதை