காலம்

கடந்துச் சென்றால்
திரும்பாதது உலகில்
கடன் வாங்க இயலாதது...!
உழைப்பாளிகளுக்கு
ஊதியமளிப்பது
தன்னை
உறங்கி கழித்தோரின்
வாழ்வை உறங்க
வைப்பது...!
வங்கிகளில் வட்டி கணக்கிட உதவுவது
ஆயினும்
அங்கு சேமித்து
வைக்க முடியாதது!..
தன்னை சரிவர
பயன்படுத்தியோரை
வாழ்வினில் உயர்த்துவது
வாய்ப்பேசி பொழுது
கழித்தோரை
வறுமைக்குள்
திணிப்பது...!
உடலின் வாயிலாக
வயதாக தோன்றுவது
உள்ளத்தின் வாயிலாய்
அனுபவமாக
தோன்றுவதிது!..
உலகில் பொன்னுடன்
ஒப்பிடப்படுவது
ஆயினும்
பொன் விலை
குறைந்திடினும்
தன் மதிப்பு
இழவாதது...!
மனிதரின் வாழ்விலது
ஆயுள்
இறப்பினுக்குள்
இட்டுச் செல்லும்
உறையுள்...!
பண்பாட்டினை மாற்றக்
கூடியது மனித
பண்புகளுள்
ஆதிக்கம் செய்வது...!
கடிகாரங்களில்
வாசம் செய்வது
கதிரவன் மூலம்
கரைந்து செல்வது...!
அறிஞர்தம் வாழ்வில்
மணிமுடி...
அறியா பேதைகளுக்கோ
அதுவோர் சவுக்கடி...!
படிப்பினில்
இதன் வடிவம்
தேர்வு...
பாரதத்தில்
ஐந்தாண்டுகளுக்கு
மட்டும்
இது அனுமதிக்கும் நாற்காலி
அமர்வு!..
திட்டமிடுவோரின்
கைகளில் தவழும்
ஆயுதம்...!
இது
திருடர்களை காட்டிக்
கொடுக்கும் ஓர் தினம்...!
மனித கற்பனைக்குள்
அடைக்கயியலாதது...
திருடர்களாலும்
கொள்ளையிட
முடியாதது...!
தான் படைத்த பூமிதனில்
மனிதன் கூடாரமிட்டு
தங்கியிருக்க
கடவுள் விதித்த
கெடு...!
தன்னை சரிவர
பயன்படுத்தாதார்
வாழ்வில்
இது ஏற்படுத்தும்
பல மறக்கயியலா
வடு...!
எல்லாவற்றையும்
மாற்றக்கூடியது...
எவர் கண்ணிலும்
புலப்படாதது...
கரைந்து செல்வதே
தெரியாதது...!
யாருக்கும்
கடந்தால் திரும்பாதிது!!
வருடத்தை கணக்கிட
உதவுவது...
வாழ்க்கையென்ற
பெயரில்
கடவுள் அளித்த
குத்தகையிது..!
உயிர்களின் வாழ்வில்
இதன் முடிவு
மரணம்...!
எனினும்
இதுவென்றும்
முடிவதில்லை....
தொடரும்!!!
********************

எழுதியவர் : Daniel Naveenraj (20-Jan-16, 2:07 pm)
Tanglish : kaalam
பார்வை : 514

மேலே