எஞ்சியிருப்பது எலும்புகளே

எறும்பும் பலசாலி
எங்களின் முன்னே
நடக்கவும் திராணியற்ற
நாங்கள் உழைத்து பிழைப்பது எப்படி
பசித்தவர் வேதனை
ரசித்து,ருசித்து
புசித்துவிட்டவர் போதனை
இரண்டும் ஒன்றையொன்று
தொடுவதுமில்லை
பசி மெல்ல மெல்ல எங்கள்
சதைகளை தின்று விட்டதால்
எஞ்சியிருப்பது எலும்புகளே
எலும்புகளின் பிடிமானம்
வலுவிழந்து தேய்மானம் ஆகும்போது
அலுப்பில் மயக்கத்தில்
அடுத்தவேளை உணவுக்குப் போராட்டம்
வீணாக்கும் ஒவ்வொரு பருக்கையும்
உண்ணாதவர் கண்களுக்கு விருந்து சோறு

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (20-Jan-16, 3:28 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
பார்வை : 67

மேலே