நினைவுகள் வேண்டாம் நிஜமாக நீ வேண்டுமடி 555
பிரியமானவளே...
நீயும் நானும் ஒரே
கல்லூரிதான் என்றாலும்...
எப்போதாதுதான் சந்தித்து
கொள்கிறோம்...
நீயும் நானும் கைபேசியில்
பேசும்போதெல்லாம்...
உன்னை என் ராணியாக
நினைப்பேன்...
கல்லூரி புல்வெளியில் நாம்
அமர்ந்து பேசும் போதெல்லாம்...
என்னவளாக நினைப்பேன்...
நான் உன்னிடம் காதலை சொல்லிவிட
நினைக்கும் போதெல்லாம்...
டேய் என்னடா
யோசனை என்பாய்...
நீ உரிமையாக
சொல்லும் டேய்...
எங்கே மறுபடி சொல்லாமல்
விட்டுவிடுவாயோ என்று எண்ணி...
ஒவ்வொரு முறையும்
மறந்துவிடுகிறது காதல்...
நம் திருமணதிற்கு பின்பும்
என்னை டேய் என்று அழைத்தால்...
இப்போதே சொல்லிவிடுகிறேன்
என் காதலை...
சொல்லாமல் விட்டுவிட்டா உன்
நினைவுகள் மட்டும்தான் இறுதிவரை...
எனக்கு உன் நினைவுகள்
வேண்டாமடி...
நிஜமாக நீ வேண்டும் எனக்கு
என் வாழ்வில்.....