கவிதையும்காதலும்

கவிதையும் ….காதலும்

கவிதைப் பிறப்பதை கணித்திட இயலாது !
காதல் பிறப்பதையும் கணித்திட முடியாது !

கவிதை என்றாலே இனிப்பாய் இனிப்பது !
காதல் என்றாலும் இனிதாய் இருப்பது !

கவிதைக்கு என்றுமே வேலிகள் இல்லை !
காதலுக்கும் என்றுமே வேலிகள் இல்லை !

கவிதை எழுதுபவன் தன்னை மறக்கிறான் !
காதலில் உள்ளோரும் தம்மை மறப்பார் !

கவிதைகள் எழுதுபவன் கிறுக்க னென்பார் !
காதலில் உள்ளோரையும் கிறுக்க ளென்பார் !

கவிதையழகில் பிழைகள் தெரிவ தில்லை !
காதலர் களிடையே பிழைகள் புரிவ தில்லை !

கவிதைக்குள்ளும் உள்ளது ஒரு (க) விதை
காதலுக்குள்ளும் உள்ளதே ஒரு கவிதை !

கவிஞன் ஒருநாளில் காதலன் ஆவான் !
காதலனும் ஒருநாளில் கவிஞன் ஆவான் !

கவிதையும் …காதலும் ஒட்டிக் கிடந்தால்
காதலும் கவிதையும் ஒன்று தானே !

------ கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (20-Jan-16, 8:31 pm)
பார்வை : 105

மேலே