இனிய நட்பு
எந்நாளும்
பூரணமாய் பிரகாசிக்கும்
கதிரவன் போல
ஓயாது
வந்து கரை தொடும்
கடலலை போல
எப்பாத்திரமோ
அப்படியே உருக்கொடுக்கும்
நீர் போல
எப்போதும்
பொறுமையாய் தாங்கும்
பூமி போல
எங்குமே
நிறைந்திருக்கும்
காற்று போல
தீயவற்றை
தீய்த்துக் கொள்ளும்
அக்கினி போல
இடம் பாராது
ஒளிர்ந்து கிடக்கும்
நிலவு போல
முடியும் வரை
ஓயாது ஓடி வரும்
நதி போல
எதையும் எதிர்பாராது
சுகந்தம் கமழும்
மலர்கள் போல
நட்பு
எங்கும்
எதிலும்
எப்போதும்
வெற்றி கொள்ளும் !
-தமிழ் உதயா-