பிறந்தநாள் வாழ்த்து
நலம்பலதரும் படிப்பினைநிதம்
உலகினில்பல பயிலுதல்நலம்
அரவிந்தன்நீ தமிழினைப்படி
உறவுகளுனை மதித்திடும்படி
சிறப்பினைப்பெற வரம்தரும்வழி
விரைந்திடுமுனை வழிவகைசெய
பரவிடும்படி பரவசமிகு
வழங்கிடும்நலம் வளந்தரும்சுகம்
இதனாற்றான்
அரவிந்தின் பிறந்தநாள் அகிலத்தின் பெருநாள்
வரந்தரும் தை"பூசத் வளமிகு திருநாள் .
இந்நாள் உன்றனின் இனிய பொன்னாள்.
பிறந்தநாள் இன்றுகாணும் மகனே !
------ பிறர்க்குதவி செய்திடலும் வேண்டும் .
சிறந்தநாள் இன்றுனக்கு மகனே !
------- சிறப்பெல்லாம் உன்வசமும் வேண்டும் .
உறவுகளும் உனைச்சேரும் மகனே !
-------- உன்னதமாய் வாழ்ந்திடுதல் வேண்டும் .
மறவாதே பெற்றோரின் சொல்லை
-------- மாசிலா வாழ்வுதனை வாழ்கவாழ்க !!!!