முடிவில்லாப் பயணங்கள்
முடிவில்லாப் பயணங்கள்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
தத்தித் தவழ்ந்து தாய் மடி அமர்ந்து
தந்தை விரல் பிடித்து எடுத்தடி வைத்து
எட்டி நடந்து இருப்புக்கள் கடந்து
முற்றிப் பழுத்து முதுகனி ஆகி
வெற்றிகள் வாகை சூடிட வேண்டி ....
ஐந்தில் பாலராய் ஆடி ஓடி
பத்தில் பள்ளியில் தாவிக் கூவி
பதினாறில் உயர் கல்வி ஏறி மேவி
இருபதில் பல்கலை தோண்டித் தாண்டி ..
இனிதே தொழிலில் நிலைத்து
இனிப்பது காதலில் திளைத்து
முப்பதில் மனத்தில் ஒருமித்து
திருமண வனத்தில் இணைந்து
ஒருமித்த வாழ்வில் புனைந்து ...
உறவிலே குழந்தைகள் ஏந்தி
உயிர்ப்புடன் வாழ்வினை நகர்த்தி
இளமையின் தோல்விகள் விரட்டி
இனிமைகள் நிலைத்திட ஏங்கி ...
வரையறை இல்லாப் பயணம்
வாழ்வினில் முடித்தவர் நாளும்
முடிவுறா நகர்வுகள் ஓடி
முடியுமா முதுமைகள் நாடி !
- பிரியத்தமிழ் -