அன்பு வழிந்த மாளிகை

- - - - - - - - - - - - - - - - - - - - - -

அதோ
அந்த ஓலைக் குடிசை தான்
என் வீட்டு முகவரி.
ஞாபகங்களை மேலிழுத்து
தலை குனிந்து உள்
செல்கிறேன் !

சுண்ணாம்பு தீட்டிய
சுவர்களை ஏந்தி
சாணி தடவிய
தரைகளைத் தாங்கி
தென்னோலை வேய்ந்த
கூரையை மூடி
ஓங்கி கிடக்கிறது
என் ஊரில்
இன்பத்தால்
கட்டிய மாளிகை !

என் ஆனந்தம் பூத்தது
அன்பு கொழித்தது
பாசம் வழிந்தது
உள்ளங்கள் சிரித்துக்
குளைந்தது
அணைக்கட்டு கரைந்து
குளத்தில் மூழ்கி
ஆழப் புதைந்த மண் போல
எல்லாம் நிறைந்து
இன்பம் புதைந்து கிடந்தது !

ஆனால். .....
நீண்ட பயணத்தின்
தொடக்கத்தில் நான். .....
எங்கோ ஓர் அயலுறவின்
மேல் மாடிப் படியில்
வழிகின்ற விழித்துளியையும்
உமிந்து விழுங்கிக் கொண்டு !

" நாய் வீட்டைக் காக்கும் "
வந்த பின்னர்
"அடிக் நாயே வெளியே "
என
நன்றி கறைப்பட்ட
நபர்களிடையே
நானும் என் நாய்க்குட்டியுடன்
சேர்ந்தே துயில்கிறது
இந்தத் தெரு !

- பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (24-Jan-16, 2:43 am)
பார்வை : 85

மேலே