போயிட்டு வரேன்
சிறுபிள்ளை தேம்பல் இது. .
கன்னத்தில் பூசியிருக்கும்
ஈரத்தின் சாயம் சொல்லும்
சொந்தமண்ணை விட்டுச் செல்லும்
தருணத்தின் வலியை. .
"கண்ணுக்குள்ளையே நிக்குற மா"
கண்ணீரை மறைத்து
திருநீரை பூசி அனுப்பும் அம்மாவிடம்
"அடுத்த லீவுக்கு கண்டிப்பா வரேம்மா"
சமாதானம் சொல்லி வந்த கதை
சுமந்து செல்லும் பேருந்தின்
கம்பிகள் அறியா வண்ணம்
அலைபேசியில் அப்பாவிடம்
"டிக்கெட் போட காசிருந்தா
அடுத்த லீவுக்கு வரேம்பா"
சொல்லிவிட்டு கிளம்பினேன்
சொந்த மண்ணை விட்டுச் செல்லும்
தருணத்தின் வலியை சொல்லும்
கன்னத்தில் பூசியிருக்கும்
ஈரத்தின் சாயம். .
இது சிறுபிள்ளை தேம்பல். .