காதல் தீ
காதல் தீ
வானம் விட்டு வாராச்
செங்கோடையின் திமிரில்
பூப்பதில்லை காதல் ...அது
வண்ணம் கொண்ட நிலவு
பூமிக்குத் தாரகை
உளியினால் கல் ஒரு நாள்
சிலையாகலாம் ...அதனால்
சிற்பம் அழிவதில்லை
ஒரு போதும்
உருவங்கள் மாறலாம்
காலங்களில் மாறும் போது
கனவுகள் கலைவதில்லை
ஒரு போதும்
உடைந்த பொருள் கை கொடுக்கும்
....பின்னொரு நாளில்
பழமை மாறா மரபும்
புதியவர்களைப் புடமாக்குகிறது
கண் களைத் தோற்றுவிக்கும்
கனவுகளே வெற்றி பெறும்
காதலர்கள் உலகில்
உன்னையும் கடத்தும்
காதல் என்ற நெருப்பு
மின் கம்பிகளில்லாமல்
அவரவர்கள் வாழ்க்கையில்
நம்பிக்கை இருக்கும் வரை
விட்டுக் கொடு
பட்டுத் தெளி
அனுபவம் பேசு
உண்மை பழகு ....அப்போதுதான்
நிழல் நிஜமாகும்.