மறுத்த சொர்க்கம்
பல யுகங்களுக்கு முன்னதான
சில ரம்மியமான ஆண்டுகளின் போது
என்னோடு அவள் இருந்தாள்
கடற்கரை சார்ந்த ஒரு நிலப்பரப்பின்
சாம்ராஜ்ய அதிபதியாக நான் ..
அப்போது!
அவள் மூச்சிலும் பேச்சிலும்
எங்களின் காதல் மட்டுமே
நிறைந்திருந்த ஒரே காரணம்தான்
யுகங்கள் தாண்டியும்
என்னை பின்தொடரச் செய்கிறது
அவளை !
அன்று ..
சொர்க்கத்தின் வாசற்படியில்
அவளை இறக்கிவிட்டு விட்டு
நான் எதிர்பக்கம் போக நேரிட்டது..
அப்போது..மிகப்பெரும்
சாம்ராஜ்யம் ஒன்றினை
ஸ்தாபித்த சாம்ராட்
நான் என்பதால்..
..
மறுபடி மறுபடி ஜனித்து
என் பாவங்களை போக்கிக் கொண்டே
இருந்த எனக்கு
ஓர் இரவில் ..
என்னருகில் வந்து அமர்ந்த
கண்கள் மின்னும்
நாய் ..ஒன்று கண்டதும்
இந்த பார்வை ..
முன் கண்டதே என்பது
தோன்றிய உடனே
..
என் காதலி
உயிர்த்தெழுந்தாள்..
அவளது பழைய உருவில் ..
என்னை விட்டு தனியளாய்
சொர்க்கத்தின் கதவை தாண்டாமல்
வந்தால் அவருடன் வருவேன்..
என்று திரும்பியவள் ..
புழுவாய்..எறும்பாய்..பறவையாய்..
பல பல பிறவிகள் எடுத்து
கன்னியாய்
எனக்காய் ..மடிந்து
காத்திருந்த கதை சொல்லி
சேர்த்தழைத்து சென்றான்
சொர்க்கத்தின் காவலன்
எங்கள் இருவரையும்..
..
இப்போது வேண்டாம்..
இங்கே இருப்போம் கொஞ்ச நாள்
என்றே
சுவர்க்கம் மறுத்தோம்..
..
இப்போது
உங்களைக் கடந்து செல்கிறோம்..
எங்கேனும்..இல்லை..இல்லை
முடிந்தால்
சொர்க்கத்திலே நாம்
மீண்டும் சந்திப்போம்!