தேடட்டும் தம்பி பாப்பாவை

தேடட்டும் தம்பி பாப்பாவை!

அழகழகான பொம்மைகளுடன்
ஆசையாய் விளையாடுகையில்..
ஆசையாய் அம்மா வந்து
நேசமாய் கட்டியணைத்தே
”தம்பி பாப்பா” வேண்டுமா ?
செல்லமே ! என கொஞ்சினாள்!

அழகான பொம்மைகளுடன்
ஆசையாய் விளையாடியது
அலுத்து விட்டதால்…..
ஆசையாய் நானும்….
அழகான தம்பி பாப்பா
வேண்டுமென்றே சொல்லிவிட்டு
தூங்கி விட்டேன் !

நல்ல இருட்டினில்…
கண்விழித்து பார்க்கையிலே…
அணைத்து படுத்திருந்த…!
அம்மாவைக் காணவில்லை!

ஒருவேளை…. அம்மா
அழகான தம்பி பாப்பாவை
தேடிக் கொண்டிருக்கிறாளோ?
என்னவோ ?
இப்படி ஒவ்வொரு நாளுமே!

தம்பி பாப்பாவை
தேடட்டும்… தேடட்டும்
என்றே
தூங்கி விடுவேன் !
இன்னுமா தேடுகிறாள் அம்மா
அழகான ”தம்பி பாப்பாவை”

----- கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (27-Jan-16, 9:14 pm)
பார்வை : 78

மேலே