பேச்சிலர் அறை என்பது யாதெனில்

பேச்சிலர் அறை என்பது யாதெனில்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஞாபக குப்பைகள் நிரம்பி வழியும்
அழுக்கு கிடங்குகள்...
அலமாரியெங்கும் புத்தகங்களோடு
காலி மது போத்தல்கள்...
அறையெங்கும் சாம்பல் மேடுகளாய்
சிகரெட் கழிவுகள்...
கதவுகளிலும் சன்னல்களிலும்
துவைக்காத துணிகளோடு
ஈரமான உள்ளாடைகள்...
மடிக்கணினிகளிலும் அலைபேசிகளிலும்
அதிகபட்ச அடல்ட் ஒன்லிகள்...
பசியோடு முடியும் கிழமைகள்...
இரவெல்லாம் அரட்டைகள்...
விடியற் காலையில் தொடங்கும் உறக்கங்கள்...
ஞாயிற்று பின்மதிய
துவைக்கும் சத்தங்கள்...
பக்கத்து கல்யாண மண்டபங்களில்
திருட்டு சாப்பாடுகள்...
ஒத்த ரூபாய் இல்லையென்றாலும்
குறைவில்லாத களிப்புகள்...
அறையின் அழுக்குகளை போல்
நிறைந்து கிடக்கும் நட்புக்கள்...

எழுதியவர் : கோபி சேகுவேரா (28-Jan-16, 9:14 pm)
சேர்த்தது : கோபி சேகுவேரா
பார்வை : 74

மேலே