வாழ்த்து

000 வாழ்த்துக் கவிதை 000
-கவிஞர்.கண்ணன்சேகர்-


தேன்தமிழ் வானொலி தெவிட்டாத தமிழொலி
தேமதுரக் குரலொலி செஞ்சீன அழகொலி !
வான்வழிக் காற்றொலி வந்திடும் சங்கொலி
வளமான சொல்லொலி வழங்கிடும் வாழ்த்தொலி !
யான்விரும்பும் சிற்றலை இதமான எழிலலை
எவரெஸ்ட் மாமலை ஏறிவரும் வானலை !
நான்கேட்கா நாளிலை நாளும்வரும் தமிழலை
நாடிவரும் சிற்றலை நட்புறவு பேரலை !

யுவாங்சுவாங் நட்புறவு எங்கள்நேரு நல்லுறவு
யுகம்காணும் புத்துணர்வு பஞ்சசீல பற்றுறவு !
அவணிக்கு முன்னுறவு ஆதாரம் பட்டுறவு
ஆழமான கூட்டுறவு அணிசேரும் நாட்டுறவு !
பவனிவரும் காற்றுறவு பாடிவரும் பாட்டுறவு
பல்துறை ஒத்துறவு பார்போற்றும் ஒப்புறவு !
கவனத்தில் கருத்துறவு காலத்தால் கனிந்துறவு
கனித்தமிழ் தந்துறவு காதோரம் கலந்துறவு !

சிங்கார பதிப்போடு சீனத்தமிழ் ஒலியேடு
சிறப்பான இயக்கத்தோடு சேர்ந்தோங்கும் நேயர்க்கூடு !
மங்காத ஒளியோடு மனமெல்லாம் மகிழ்வோடு
மணக்கின்ற மடலோடு மலையென கடிதக்காடு !
பொங்கும் பூக்காடு புதுமையான நிகழ்ச்சியோடு
பூரிக்கும் சீனத்தோடு கைக்கோர்க்கும் உலகநாடு !
எங்கும் சிவப்போடு ஏற்றமிகு முனைப்போடு
எழுச்சிமிகு திருநாடு இணைந்தது தமிழோடு !

வாழ்த்துக்களோடு...
-கவிஞர்.கண்ணன்சேகர்,
9894976159.
அனைத்திந்திய சீன வானொலி
நேயர்கள் மன்ற 26-வது கருத்தரங்கம்.
சென்னை பல்கலை கழகம், சென்னை. நாள்-31.01.2016
==எழுத்துக்கு வருவார் என்று எதிர்பார்ப்போம்===

எழுதியவர் : -கவிஞர்.கண்ணன்சேகர், -சேர் (28-Jan-16, 9:05 pm)
பார்வை : 198

புதிய படைப்புகள்

மேலே