கஜலைப் புரிந்து கொள்வோம் ரதீ ஃ ப் எனும் சொல்லோசை

तुम नहीं, गम नहीं, शराब नहीं -- thum nahi gham nahi sharaab nahi -- நீயில்லை துயரும் இல்லை போதை மதுவும் இல்லை
ऐसी तन्हाई का जवाब नहीं --- aisi thanhaayi ka javaaab nahi -----இதுபோல் ஒரு தனிமைக்கு நிகரும் இல்லை

गाहे-गाहे इसे पढ़ा कीजिये, ---- ghahe-ghahe ise pathaa keejiye ---- இப்பவோ இவள் முகவரியை தேடுங்கள்
दिल से बेहतर कोई किताब नहीं---dil se behathar koi kithaab nahi ---- இதயத்திற்கு மேலான ஒரு புத்தகம் இல்லை
ऐसी तन्हाई...

जाने किस-किस की मौत आई है --- jaane kis-kis ki mauth aayi hai ---- யார் யார் மூச்சு நிற்குமோ இன்று அறியேன்
आज रुख पे कोई नकाब नहीं------ aaj rukh pe koyi naqaab nahi --------- இன்று இவள் முகத்தை திரையால் மூடவில்லை
ऐसी तन्हाई...

वो करम उँगलियों पे गिनते हैं ---vo karam ungiliyom pe ginthe hain ---இவள் செயல்களை விரல்களில் எண்ணிப் பார்க்கிறேன்
ज़ुल्म का जिनके कुछ हिसाब नहीं julm kaa jinke kuch isaab நஹி---- இவள் புரியும் குற்றங்களுக்கு ஒரு கணக்கே இல்லை
ऐसी तन्हाई...

சயீத் ராஹி யின் அழகிய கஜல் . ஜக்ஜீத்சிங் இசை அமைத்து இனிமையாகப் பாடியிருக்கிறார் . முதலில் கேட்கவும்.
ஹிந்தி அல்லது உருது வரிகளை ஆங்கிலத்திலும் தந்திருக்கிறேன் கவனிக்கவும்
நஹி என்ற சொல்லோசை மத்லா எனும் ஆரம்ப சேர் அல்லது வரிகளிலிருந்து கஜலின் இரண்டாவது வரி தோறும்
பயின்று வருகிறது பாருங்கள் . இந்த நஹி எனும் சொல்லோசை இந்த கஜலின் கா ஃ பியா
இந்த நஹி என்ற சொல்லுக்கு முன் ஆரம்ப இரண்டு வரிகளில் வரும் ஷராப் ஜவாப் அடுத்த இரட்டை வரிகளில்
வரும் கிதாப் நகாப் இஸாப் என்ற ஒரேவிதமான ஆப் எனும் சொல்லோசைச் சொற்கள் இந்த கஜலின்
ரதீ ஃ ப் .
சமஜ் லீஜியே ஜனாப் தில் ஸே பெஹத்தர் கோயி கிதாப் நஹி !

---அன்புடன் கஜல் அன்பன், கவின் சாரலன்

எழுதியவர் : சயீத் ராஹி (29-Jan-16, 10:12 am)
பார்வை : 144

மேலே