உன் வருகைக்காக

காதல் என்னும் கை தட்டியது...
என் மனம் என்னும் கதவினை திறந்தேன்...
உள்ளே வந்தான்..என் சிரிப்பினை அவன் வசம் செய்தான்....
என்னிடம் இருக்கும் அந்த சில்லறை சத்தம்....நான் அவனோடு மட்டுமே...
எந்தன் வெட்கத்தின் பதுமையினை அவன் பார்வையில் உணர்ந்தேன்....
என் இருவிழி பார்வையினை அவன் வசம் சேர்த்தேன்....
எனக்கு தெரியவில்லை.... ஏன் இப்படி ஒரு மாற்றம்....
இன்று எனக்குள் ஒரு மனஅழுத்தம்...
அம்மா... என்று அழைக்க எண்ணுகின்றது..
இருந்தும் முடியாமல் ...
மரணம் என்னும் கதவினை ..
என் மனம் என்னும் கைகளால் தட்டினேன்...
கதவுகள் திறக்கவில்லை...
காதல் என்னும் வாசலில்...
வழி இருந்தும் செல்ல மறுக்கின்றது ....
நான் திறந்த கதவுக்குள் நானே சிறைக்கைதி ஆனேன் ...
தப்பி செல்ல வழியில்லை... வலியை சுகமாய் உணர்ந்தேன்....
அவன் என்னுடன் இருந்த பொழுது
....இன்று கனமாய் , ரணமாய் ... வலிக்கின்றது...
வேண்டும் என்றால் ........ வா ......
உன் கை பிடித்து நடக்கின்றேன்.....
என்றும் வழிமேல் விழி வைத்து...... உன் வருகைக்காக..
என் வளையல் சத்தத்தோடு....
உன் கை பிடிக்க ..........காத்திருக்கும்