சிதைக்காதீர் சீதைகளை
கருவில் இருக்கும்போதே
உருக்குலைக்கப் பார்ப்பவர்கள்
பந்தங்களல்ல நம் வாழ்வின் அந்தங்கள்
கண்ணீர்த்துளிகள் கூட அமிர்தத்துளிகளோ... இவர்களுக்கு
பெண்ணோ,ஆணோ
பிறப்பை நிர்ணயிப்பது
ஆணிடமிருந்து பெறப்படும் குரோமோசோம்கள்
ஆதாரமாய் அமைய
பெண்மையை சித்ரவதை செய்து
அழிவையே நோக்கமாக கொண்டவர்கள்
அன்னை விஷங்களை
விடையாய் தேடியிருந்தால்
திருத்தங்கள் பெற்றிருக்குமோ தரணி
அழிவில் கூட
ஆதாயம் தேடும்
அயோக்கியர்கள்
எரிகிற வீட்டில்
பிடுங்கிய மட்டும் லாபம்
என்று வாழும்
இனம் மாறியவர்கள்
பெண் என்றால்
பேயும் இறங்கும் என்பர்
பெறப்போகும்
பெண்ணே வேண்டாம் என்பவர்
சீதைகளை வரவேற்கப் போவதில்லை
சிதைக்காதிருங்கள் போதும்