கையூட்டா காணிக்கை

கை கூப்பி வணங்கி
வேண்டும் ஏழைகள்
கொடுப்பதில்லை காணிக்கை

கையூட்டாய் காணிக்கையை
கொடுக்கும் கர்ணர்களுக்கே
காவலும்,ஏவலும் செய்பவனே
கடவுள் ஆகிவிட்டானோ...

தர்ம நியாயங்கள்
தெய்வம் என்றால்
விலை கொடுத்து
வாங்கும் நியாயங்கள்
விலையாய் பெறுவது
விலை மதிக்கமுடியாத
வாழ்க்கையை அல்லவா...பின்
எங்கே இருக்கிறான் இறைவன்

தேடியே அலையும்
வாடிய உள்ளங்கள்
நாடியே காத்திருப்பது
விடியல் என்று ஒன்று வரும்
விடையாய் சொல்லும் உண்மைகள் என்றே

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (29-Jan-16, 3:58 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
பார்வை : 60

மேலே