செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்
முள்ளும் மலரும் (1978 ஆம் ஆண்டு வெளிவந்தது) என்ற திரைப்படத்திற்காக கவிஞர் கண்ணதாசன் இயற்றி, இளையராஜா இசையமைத்து, கே.ஜே. ஜேசுதாஸ் பாடிய ‘செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்’ என்ற ஒரு அருமையான பாடலை நம்மில் பலரும் கேட்டிருப்போம்.
இந்த பாடல் காட்சியில் நடிகர் சரத்பாபு ஜீப் ஓட்டியபடி பாட்டுப் பாடிக்கொண்டு வருவார். ஜீப்பின் பின்னால் நடிகை ஷோபாவும், இன்னொரு துணைநடிகையும் அமர்ந்திருப்பார்கள்.
இப்பாடல் (மெச்ச)பௌளி என்ற ஒரு அபூர்வ ராகத்தில் பாடப்பட்டதாகும். இளையராஜாவின் இசையமைப்பில் இந்த ராகத்தில் ஒரே பாடல்தான் பாடப்பட்டதாகத் தெரிகிறது. யு ட்யூபில் கேட்டுப் பாருங்களேன்.
செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்
வளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மோக கூந்தலோ?
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ?
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளைத் தேடுது
ஆசைக் குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள் (செந்தாழம்பூவில்)
அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாகப் போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தரத் தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்?
மலையின் காட்சி இறைவன் ஆட்சி (செந்தாழம்பூவில்)
இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடைக் காற்று வான் உலகைக் காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னைக் கூட்டுது
மறவேன் மறவேன் அற்புதக் காட்சி (செந்தாழம்பூவில்)