படிமமாக்கல்

படிமமாக்கல்

சில பொழுதுகள் அழகானவை...
அவைகள் தற்போது
இலக்கமுறை படிமமாக்கல்
செய்து கொண்டு இருக்கிறேன்..

ஒளித்து வைக்க ஒரு இடம்..
கடவுசொல்லாக மிக மிக
தொலை தூர ஒரு வார்த்தை..
நிச்சயம் கண்டுபிடிக்க முடியாது...

நீ கள்வன்!
எளிதில் களவாடி
விடுவாய் என்றே இப்படி!!!...

அச்சச்சோ, கடவுச்சொல்
குறிப்பை கொடுத்து விட்டேனே...
இனி என்செய்வேன்..

நீ எப்போதும் இப்படியே செய்..
உன்னிடம் எதையுமே மறக்க
இயலாதவளாய் நான்...

- வைஷ்ணவதேவி

எழுதியவர் : வைஷ்ணவதேவி (30-Jan-16, 12:16 am)
பார்வை : 404

மேலே