கனவு

என்ன வேண்டும் என்று
புருவங்களை உயர்த்தி
நீ கேட்க,
உதடுகளை குவித்து
முத்தம் வேண்டும் என
நான் கேட்க
நாளை என ஜாடையில் சொல்வாய்.

நானோ இன்று
இப்பொழுதே வேண்டும் என்று
தலையசைத்து அடம்பிடிக்க
இரு வருகிறேன் என்று
கைகாட்டுவாய்.

இதயமோ வேகமாய்
துடிக்க எத்தனிக்கிறது
ஆதாயம் வர இருப்பதை எண்ணி.

அந்த பக்கம் வா என்று
உன் கண்கள் சொல்ல
எந்தன் கண்களை மூடி
சரி என்கிறேன்.

காத்திருக்கிறேன் கன்னிகைக்காக
காற்றில் அசையும்
தலைமுடியோடு
நடந்து வருகிறாள்

உதடுகளை குவித்து
அதன் மீது விரலொன்றை வைத்து
சத்தமிட வேண்டாம் என்கிறாள்.

அருகே வந்ததும்
என் கன்னத்தை காட்டினேன்
அவளுதடுகளை கன்னம்
அருகே கொண்டு வர
யாரோ சத்தமிட
விழித்துக் கொண்டேன்
கலைந்தது
என் முத்தக் கனவு.


பெ.பரிதி காமராஜ்.

எழுதியவர் : பரிதி காமராஜ் (30-Jan-16, 6:17 pm)
சேர்த்தது : paridhi kamaraj
Tanglish : kanavu
பார்வை : 170

மேலே