மனசெல்லாம் 6

{ கதை சுருக்கம் : காதலை மறுத்த இலையாவை மறித்த கார்த்திக் }
இலையா,ராதிகா உறைந்தபடி அச்சத்துடன்.கார்த்திக்,சித்தார்த் நெருங்கியபடி.

சித்தார்த் :ராதிகா,உன் தோழியிடம் நீயாது சொல்லு, அவ இல்லனா நான் செத்துடுவனு நேத்து நைட்டு முழுதும் சொல்லிட்டு இருந்தான். அவன் அவள உண்மையா லவ்வு பனுறான்.

ராதிகா பேச தெரியாது அமைதியில் இலையாவை பார்க்க,இருவரும் கைப்பிடித்தபடி,இவர்களை தள்ளியப்படி விரைந்து செல்ல.உரக்க குரல் எழுப்பி இலையா என்றபடி கார்த்திக் செய்வதறியாது.சுற்றி காரிருள் சூழ நகராது கார்த்திக் நின்றபடி அவள் சென்ற சாலையை பார்த்து கொண்டிருக்க,நேரம் செல்ல செல்ல பூச்சியும்,கொசுவும்,சித்தார்த்தையும் தவிர உடன் யாருமில்லை.

சித்தார்த் :வாடா மச்சான்,வருத்தப்படாத எப்புடியும் தங்கச்சி ஒத்துப்பாடா ...
கார்த்திக் :மச்சான் அந்த பொண்ண எப்புடி கரெக்ட் பண்ணுறதுன்னு சொல்லு மச்சான் ...
சித்தார்த் :சரி,சரி,அழாத சொல்லி தொலைக்கறன்...

இருவரும் வீடு சென்றனர்,கார்த்திக் அவள் ஒருநாள் ஒத்துக்கொள்வாள் என்ற நம்பிக்கையுடன்,அவளை நினைத்தே படுத்திருந்தான்.அதிகாலை உதித்ததும் சித்தார்த் கார்த்திக்கு கால் பண்ணி அழைத்தான்.

சித்தார்த் : கார்த்திக்,இங்க வாடா இன்றைக்கு விடுமுறை,இலையா ராதிகா கண்டிப்பா விளையாடுவாங்க,இல்ல மாடிக்கு வருவாங்க...
கார்த்திக் :இதோ உடனே கிளம்பி வரன் மச்சான் ....

சனிகிழமை விடுமுறையானதால், எப்பொழுதும் போல் இலையா வீட்டு மாடியில் ராதிகா,எழில்,இலையா,சிம்தி அவர்கள் நினைத்தவாறே நின்று நகைத்து உரையாடிக்கொண்டிருந்தனர்.வீடு நடுவிலிருக்க,இருப்புறமும் ஒவ்வொரு வீடு,வீற்றிக்கு தாண்டி சாலை அதனின் அடுத்தபடி ஒரு வீடு அது சித்தார்த்,கார்த்திக் நண்பரின் வீடு,என்றும் அந்த வீட்டின் ஓரமாய் அமர்ந்தே மாடியினை பார்த்தவாறு இருப்பர்.சாலை இறங்கி சென்றால் ராதிகா வீடும் சித்தார்த் வீடும் வரும்.சரி இப்பொழுது இலையா,ராதிகா பற்றிக்காண்போம், வெளியில் அமைதியான இந்த அரும்புகள் வீட்டிற்குள் தங்கள் குழுவிற்குள் செய்யும் குறும்புகளை காண்போம்.

இலையா :ராதிகா,நம்ம கூட்டாஞ்சோறு செய்து எவ்வளவு நாளாச்சு,செய்யலாமா ?
ராதிகா :ஐ,கண்டிப்பா ,...சிம்தி,எழில் போங்க போய் கடையில 2ரூபாய்க்கு காய் வாங்கிட்டு வாங்க,சரியா,எப்பயும் வாங்குற மாறி வாங்குங்க ....
சிம்தி :அக்கா நாங்க அப்படியே நம்ம வீட்டுக்கு போய் எண்ணெய்,கடுகு எல்லாம் கொண்டு வாரோம்...
ராதிகா :சரி சிக்கிரம் வாங்க நானும்,இலையாவும் அடுப்பு,விறகு தயார் செய்றோம்...

நடக்கவிருக்கும் சமையல் கலாட்டாவை நாளைக் காண்போம் !!!

எழுதியவர் : ச.அருள் (31-Jan-16, 3:42 pm)
பார்வை : 288

மேலே