தலையெழுத்தை மாற்றிய கையெழுத்து12---ப்ரியா

மூன்று தோழிகளுமே ஒருவரையொருவர் பிரிந்திருப்பதால் என்னென்ன பிரச்சனைகள் நடக்குமோ?என்ற எண்ணத்தில் வருத்தத்துடன் காணப்பட்டனர்,முக்கியமாக ரியாதான் அதைவிட கீது.. தோழிகள் இல்லாமல் மாப்பிள்ளையை பிடித்துவிட்டது என்று சொல்லிவிட்டோமே என்று வருந்தினாள்.

இப்போதுதான் மூன்று பேருமே பிரிந்திருந்து தங்கள் முடிவுகளை தாங்களே எடுத்துக்கொள்கின்றனர்.

கீதுவிடம் மாப்பிள்ளை தனியாக பேசவேண்டும் என்று சொன்னதும் கோவிலுக்கு போங்க பேசினது மாதிரியும் ஆகும் நம்ம குடும்ப கோவிலை பார்த்தது மாதிரியும் ஆகும் என்று கீதுவின் அப்பா சொன்னார்.


இருவரும் பின்புறம் வரப்பு வழியாக நடந்து கொண்டே பேச ஆரம்பித்தனர்.மனசுக்கு பிடித்த ஒரு ஆளோடு முதல்முறையாக இப்படி இயற்கைய ரசித்துக்கொண்டே நடப்பது பேசுவதும் சுவாரஸ்யமாக புதுவித அனுபவமாக இருந்தது கீதுவுக்கு... உங்கள எங்கயோ பார்த்தமாதிரி இருக்குது ஆனா எங்கன்னுதான் தெரில? என்று முதலில் பேச ஆரம்பித்தான் அவன்,
நீங்க எந்த காலேஜ்ல படிச்சீங்க என்று கேட்டதும் அவளுக்கும் நினைவு வந்தது இவனும் அவளும் ஒரே கல்லூரியில்தான் படித்திருக்கின்றனர் என்று........

"வின்ஸ் கிருஸ்தவ பொறியியல் கல்லூரி"என்றாள்.

நானும் அதே கல்லூரிதான் அதான் பார்த்த மாதிரி இருந்திச்சி.

(இவள் முதலாமாண்டு சேரும் போது அவன் இறுதியாண்டு பயின்றிருக்கிறான்)

இவளது முழுவிபரத்தையும் தெரிந்துகொண்டான்,அவளும் அவனைப்பற்றி தெரிந்துகொண்டாள்.

இருவரும் ஒருவரையொருவர் பிடித்து சம்மதமும் தெரிவித்தனர்.

இறுதியில் தனது தோழிகளை பற்றி சொன்னாள் அவர்கள் வந்ததும் நிச்சயம் வைத்துக்கொள்ளலாமே?என்றாள்!

அவனும் இவளது பேச்சுக்கு சம்மதம் தெரிவித்தான்.
இருவரும் கோவிலுக்கு சென்று சேர்ந்தனர் அதற்குள் அவர்கள் குடும்பமே கோவிலுக்கு வந்திருந்தனர், இருவரும் முழுமனதுடன் தங்கள் சம்மதத்தை தெரிவித்தனர் தோழிகளுக்கு முடிந்தால்தான் தனக்கு திருமணம் என்றிருந்தவள் எப்டியோ விருப்பம் சொல்லிவிட்டாள் என்று அனைவருக்கும் சந்தோஷம்.

மதியம் கீதுவின் வீட்டில் மாப்பிள்ளை வீட்டார் சாப்பிட்டனர்.....தனது ஆல்பத்தை எடுத்து தோழிகளையும் தாங்கள் கல்லூரியில் எடுத்துக்கொண்ட போட்டோக்களையும் காண்பித்தாள்.

ரியாவின் முழுவிபரத்தையும் வந்தனாவின் விஷயங்களையும் சொன்னாள் கீது சொல்லும்போதே கீதுவின் கண்கள் கலங்கின.....இதைப்பார்த்ததும் அவனுக்கு புரிந்தது அவள் தோழிகள் மேல் வைத்திருக்கும் அன்பு எவ்வளவென்று..?,,!

சரிமா! விடு மனிதனாக பிறந்தாலே எத்தனையோ பிரச்சனைகள் வரத்தான் செய்யும் நாம்தான் அதை சரி செய்ய ஏற்ற வழியை கண்டுபுடிக்கவேண்டும்,இனிமேல் உன்கண்களிலிருந்து குண்டுமணி அளவுக்கூட கண்ணீர் வரக்கூடாது என்று தன் பாசத்தையும் அவளுக்கு காண்பித்தான்..!

உனக்கு தோழிகள் மட்டும் உலகம் இல்லை, இனி உனக்கென்று இங்கும் ஒரு ஜீவன் இருக்கிறது எனக்கும் மனதில் பாதிஇடம் வைத்துக்கொள் என்று தன் காதலை உறுதிபடுத்தும் வண்ணம் அவள் நெற்றியில் முத்தமிட்டான்...!

இதுவரை இல்லாத புது உலகத்திரு சென்றவள் இனி நமக்கு திருமணம் நடந்தால் நம் தோழிகள் தனியாய் இருப்பார்கள் இதற்கு உடனே ஒரு முடிவு கட்ட வேண்டுமென்று முடிவெடுத்தாள் கீது.....!

உள்ளே சென்று வந்தனாவின் டயரியிலிருந்த போட்டோவை எடுத்து தன் வருங்கால கணவனிடம் நீட்டினாள்.

என்ன இது என்று புரியாமல் விழித்தான் அவன்?

போட்டோவை வாங்கியவன் ஒரு நிமிடம் திகைத்து விட்டான்?இவனா?இவனோட போட்டோ உன்கிட்ட எப்படி வந்தது இவன் உனக்கு யாரு என்று கேள்வி மேல் கேள்விகளை அடுக்கிக்கொண்டே சென்றான்?????????

இவனை உங்களுக்கும் தெரியுமா? என்று அப்பாவியாய் கேட்டாள்?

இவனைத்தெரியாமலா, நம்பர்1 அயோக்கியன் பணத்திற்காக எதையும் செய்வான் கட்டுன பொண்டாட்டியகூட........என்று சொல்லவந்தவன் அப்படியே நிறுத்தி விட்டான்....அந்த கோவத்தில் இவன் யார் என்பது போல் மறுபடியும் இவளை முறைத்தான்.......!
________________________________________________________________________________________________________________________________________________________________
வந்தனா சொன்னபடி அனைத்தும் செய்து விட்டு நாம் வேறு ஏதாவது நல்ல கம்பெனியை பார்த்து போக இப்பவே எல்லாம் ரெடி பண்ணிவிடவேண்டுமென்ற முடிவில் இருந்தாள் ரியா!

பார்ட்டியில் அவள் அப்படி பேசிவிட்டு.......மனதிற்குள் எப்டியாவது அவனது ரகசியங்களை எடுக்கிற வரைக்கும் அவனுக்கேற்ற மாதிரி நடந்து கொள்ளவேண்டும் என்பதை புரிந்து கொண்டாள்!

இரவு அவன் குடித்து விட்டு வந்தான் இவளிடம் மறுபடியும் வந்து பதிலைக்கேட்டான்....நாளைக்கு சொல்கிறேன் இப்பொழுது வந்து தூங்குங்கள் என்று சொல்லிவிட்டு அவனை அங்கு படுக்க வைத்தாள்........அவன் தூங்கிப்போனான் ஆனால் அவளுடைய தூக்கம் காணாமல் போனது..!

காலையில் எழும்பியவன் அவள் அருகிலிருந்த இருக்கையில் உட்கார்ந்திருந்ததை பார்த்ததும் மன்னிப்புக்கேட்டுக்கொண்டான்....!

அவளும் அதை மனதில் வைக்காதது போல் அமைதியாயிருந்தாள்.

இன்று சில முக்கிய இடங்களுக்கு கம்பெனி சம்மந்தமாக செல்லவேண்டும் சீக்கிரம் கிளம்புங்க என்று ஒரு முதலாளியாய் கட்டளையிட்டான்...?

சரி என்று சொல்லிவிட்டு கிளம்பத்தயாரானாள்.

இருவரும் வெளியே பல இடங்களுக்கு சென்றுவிட்டு...ஹோட்டலுக்குள் சென்று சாப்பிட அமர்ந்தனர், இன்னிக்கு பதில் சொல்றேன்னு சொன்னீங்க சொல்லவே இல்ல என்று மறுபடியும் கேட்டான்!

பாவி குடிபோதையில்தானே இருந்தான் மறந்திருப்பான் என்றிருந்தோமே தெளிவா இருக்கானே என் நினைத்தவள் இப்பொழுது அவனுக்கு ஏற்ற பதில்தான் சொல்லவேண்டும் அப்பொழுதுதான் நாம் நினைத்த காரியம் நடக்கும் என்று மனதிற்குள் திட்டமிட்டாள்....!

நீங்கள் இப்பொழுது பதில் சொல்லலன்னா நான் உங்கள சாப்பிட விடமாட்டேன் என்று அவளது கையை தனது கையால் அழுந்த பிடித்திருந்தான்.

அவனது அந்த செயல் அவன் மேல் மறுபடியும் அவளை வெறுக்க வைத்தது......பதில் சொல்றேன் கையை எடுங்கள் என்று சற்று கண்டிப்பான குரலில் சொன்னாள்.

சூழ்நிலையை தெரிந்துகொண்டவன் மெல்ல கையை எடுத்து விட்டான். அவனது கண்களிலும் மனதிலும் முழுவதும் ரியாவே பதிந்திருப்பதாக வெளியில் காட்டினான்...கண்களில் காதல் உருகிக்கொண்டிருந்ததை ரியாவும் கவனிக்காமல் இல்லை எப்பொழுதுமே அவனது கண்கள் ஒருவித துடுதுடுப்புடன் தான் இருக்கும் யாருமே அவன் கண்களில் எளிதில் மயங்கிவிடுவர் அவ்வளவு அழகு......ரியா மட்டும் விதிவிலக்கா என்ன?அவன்கண்களை நேராய் எதிர்கொண்டு தாங்கும் சக்தி ரியாவுக்கு இதுவரை இல்லை.

அவளது மௌனத்தை பார்த்தவன்......எப்போ சொன்னாலும் பரவாயில்ல ஊருக்கு போகும் போது நீங்கள் எனது காதலியாக என்கூட வந்தால் போதும் என்று சொல்லிவிட்டு சாப்பிட ஆரம்பித்தான்...!

அவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது அவர்களது டேபிளுக்கு எதிரில் வந்தமர்ந்தனர் இருவர் அவர்களைப்பார்த்ததும் சரி சாப்பிட்டாச்சா?வாங்க போகலாம் என்று ரியாவிடம் கேட்டான்..?

ஏன் இவன் அவர்களை பார்த்துவிட்டு இப்படி முகம் மாறிவிட்டான் ஏதோ இருக்குது என்ற இவளது யோசனை கலைவதற்குள்......
அவர்களில் ஒருவன் இவனருகில் வந்து........டேய் வசந்த் சூப்பர்டா அந்தக்கிளி எங்கே?.....என்ன இது புது ஐட்டமா....?என்று ரியாவின் மீது பார்வையை செலுத்திக்கேட்டான்..........!





தொடரும்.....!

எழுதியவர் : ப்ரியா (1-Feb-16, 11:54 am)
பார்வை : 394

மேலே