பிறந்தநாள் வாழ்த்து

என்
இனிய தோழிக்கு,
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
பரிசுப் பொருள் தர
வாய்ப்பில்லாததால்
இந்த 'கவிதைப் பரிசு' .
உன்னை வர்ணித்து சில வரிகள்.......
அழகிய மானே,
ஆப்பிள் பெண்ணே,
இனியவளே,
ஈகை குணம் உடையவளே,
உயர்ந்த குணம் கொண்டவளே,
ஊக்கம் அளிப்பவளே,
எளிமையானவளே,
ஏறுநடை போடுபவளே,
ஐயம் அற்றவளே......
மிகவும் ஆர்வத்துடன்
படித்துக் கொண்டிருக்கிறாயா...?
ஆனால்
நான் இத்துடன் எனது
கவிதைக்கு முற்றுப்புள்ளி
வைக்கலாம் என்று
நினைக்கின்றேன்....
ஏன் என்று கேட்கின்றாயா...?
கவிதைக்கு பொய் அழகு
என்பார்கள்
அதற்காக நிறைய
பொய் சொல்லக்கூடாதல்லவா....
அதற்காகத் தான்......!
(சிறு கோபத்தோடு புன்னகைக்க செய்ய இப்படியும் வாழ்த்தலாம்)