கள்ளியால் காதல் கொண்டேன்

பூங்காவில் உனை பூவாய்க் கண்டேன்
பூங்காவாய் உனை பூவிழியில் கண்டேன்
தூர வானில் தூரல் கண்டேன்
தூரும் வானில் தூரலாய்க் கண்டேன்
வண்டு பாடும் சோலை கண்டேன்
வம்பாய் பேசும் வாயில் கண்டேன்
வண்ணம் கொடுக்கும் மேனி கண்டேன்
வானம் மேலே வானம் கண்டேன்
கோவை இதழில் கோபம் கண்டேன்
கோள்கள் நிலையில் மாற்றம் கண்டேன்
விழியின் முன்னே வியப்பைக் கண்டேன்
விடியும் பொழுதில் ஒளியாய்க் கண்டேன்
மின்னும் சிரிப்பில் மின்சாரம் கண்டேன்
மிளகின் வாசம் பேச்சில் கண்டேன்
கோடை காலம் மழையைக் கண்டேன்
கோபம் கொள்ள புயலும் கண்டேன்
பஞ்சைக் கொஞ்சும் அனலைக் கண்டேன்
பாசம் அதிலே பசுவாய்க் கண்டேன்
கடலில் எழுந்த கதிரவன் கண்டேன்
கள்ளியின் கண்ணால் காதல் கொண்டேன்.

எழுதியவர் : செல்வா.மு (தமிழ் குமரன்) (5-Feb-16, 9:04 pm)
பார்வை : 70

மேலே