வாழ்க்கை

வாழ்க்கை

வாழ்ந்த பின் தெரியுமோ?
வாழும் முன் அறியுமோ?
கையில் சிக்கியதில்லை!
சிக்கினால் நிற்பதில்லை!

தேடியே பின் கிடைக்குமோ?
தேடலின் போது கிடைக்குமோ?
வந்தவழியும் அறிந்ததில்லை!
வரும்வழியும் தெரிவதில்லை!

பணம் இருந்தால் வருமோ?
குணம் இருந்தால் வருமோ?
விவரமும் தெரியவில்லை!
அதைபார்க்க நேரமில்லை!

அண்டிக் கிடந்தால் அடைந்திடுமோ?
வேலைபார்த்தால் வந்திடுமோ?
இதைபார்த்து வருவதில்லை!அதற்கு
இது ஒன்றும் புரிவதில்லை!

பனிந்து வாழ்ந்தால் வந்திடுமோ?
தருக்கித் திரிந்தால் வந்திடுமோ?
பனிந்து பார்த்தேன் வரவில்லை!
நிமிர்ந்து பார்த்தேன் வந்ததில்லை!

நன்மை செய்தால் வந்திடுமோ?
தீமை செய்தால் அடைந்திடுமோ?
நன்மை என்றால் தெரிவதில்லை!
அதற்கு,
தீமை என்றால் விளங்கவில்லை!

கருப்பு என்றால் வந்திடுமோ?
சிவப்பு என்றால் வந்திடுமோ?
மனிதர் வண்ணம் பார்ப்பதில்லை!
அதற்கு,
மானம் எதுவும் தெரிவதில்லை!

இரண்டு என்றால் வந்திடுமோ?
இருபது என்றால் வந்திடுமோ?
வயதை பார்த்து வருவதில்லை!
அதற்க்கு,
எண்கள் பற்றி தெரிவதில்லை!

காதல் என்றால் நின்றிடுமோ?
காமம் என்றால் நின்றிடுமோ?
காதல் வந்தும் வந்ததில்லை!
காமத்திலும் அடைந்ததில்லை!

இதுபற்றி புரிவதில்லை?
இது ஒன்றும் தேவையில்லை?
நாள்நாளாய் காலத்தை
கழிப்பதே வாழ்க்கையென்று
வாழ்ந்து வந்தோம்.
பெரிய தொல்லை!!!!

எழுதியவர் : (7-Feb-16, 11:04 am)
Tanglish : vaazhkkai
பார்வை : 163

மேலே