அமர மனம்

மரண பயத்தாலேயே,
மரணத்தை வென்றவனிடம்,
மாயை வினவியது....

பயம் வந்ததெப்படி ? - மாயை

மரணத்தை பார்த்ததால்...

பயம் வந்தவுடன் ? - மாயை

எதிர்கொள்ளத் துணிந்தேன்...

துணிந்ததெனால் ? - மாயை

மிகுபயத்தின் எதிர் வினை...

வினை என்பது ? - மாயை

புரியாது புரிவது....

புரியவில்லை... - மாயை

புரியாததே, புரிதலின் முதற்படி...

இரண்டாம்படி? - மாயை

முதலில் படி...
(படியென்றால் பணிவது)

பணிந்தால் ? - மாயை

பணியும்...

எது ? - மாயை

எல்லாம்...

இதன் பயன் யாது? - மாயை

உன்னிடம்,
மரணமும் மரணமுறும்.

எழுதியவர் : ரமண பாரதி (14-Jun-11, 8:00 pm)
சேர்த்தது : ரமண பாரதி
பார்வை : 381

மேலே