பட்டுச் சோலை
மதியின் பிம்பம் இவள் முகமோ
மயக்கும் விழியில் வீழ்ந்ததென் அகமோ
மழலைச் சிரிப்பு இவள் இதழில்
மலர்கள் பூக்கும் இவள் கூந்தலில்
மாலைப் பொழுதில் மதி மயங்கி
மூக்கில் வீழ்ந்த விண்மீன் அங்கே
கார்கூந்தல் தொட்டு மின்னும் தோடு
நான் பார்ப்பேன் அவளை ஏக்கத்தோடு
கார்முகிலும் கரைந்து மதியில் இமையாக
இடையில் உதிக்கும் வெள்ளி பொட்டாக
வளையல் தோட்டம் நிறங் கூட்டும்
கைபட்டால் மெல்லிசை விண் கொட்டும்
பகையோனையும் இழுக்கும் பட்டுச் சேலை
நடந்தால் மரிக்கும் பகல் வேளை
கையில் தொடுத்தே மலர்ச் சோலை
அணைந்தாய் சுவரில் காலை வேளை.