என் கொண்டாடப்படாத காதல்

நேசிக்க கற்று கொடுத்தாய் - இன்று
சுவாசிக்க மறந்துவிட்டேன்………………

ஆதாயம் இல்லாமல் காதலிக்க முடியாது என்றாய்
ஆகாரம் இல்லாமல் நான் ………….

தீண்டி செல்லும் தென்றலை உணராத உருவம் போல்
என் உண்மை காதலை உணராமல் பிரிந்துச்சென்றாய்………….

அன்று இமைகளை மூடி நன்றாக உறங்கினேன் - இன்று
இமைகளை மூட மனதில்லை - எதிரில் உன் புகைப்படம்

விழிமூடி யோசிக்க கூட திராணி இல்லை விழிகளுக்குள்ளும் நீ ……..
விழி திறத்தாலும் கண்களில் கண்ணீராக நீ …………

வலிகளை மறக்க பாடல்கள் கேட்டேன் - இரட்டிப்பானது வலிகள்
உன் மீது கொண்ட காதலும் கூட - இரட்டிப்பானது

சில நேரம் என்னையே மறந்து உன் நினைவுகளை மட்டும் அறாத காயமாக தருகிறாய்

மரணமே வேண்டுகிறேன் !!!
இந்த நிமிடமே என்னை சொந்தமாக்கி கொள் !!!!

வலிகளை மறைக்க கற்று கொண்டேன் …….
கண்ணீரை மறைக்க முடியவில்லை …..
கண்ணீரை கண்டு பாவம் பார்த்து வந்து விடாதே ……………
காதல் கொண்டு வந்து விடு காலமெல்லாம் காதலிப்போம் காதல் சின்னங்களாய் ………..

காதலிக்கிறேன் என்று மட்டும் சொல்லிவிடேன் ……….
நான் காதலிக்கிறேன் …..
உன் காதலுக்கும் சேர்த்து ……….

என் விழி ஓரங்களில் விழிநீர் பிரவேசிகிறது
என்றாவது இந்த வரிகள் உன் இதயத்தை முத்தமிடாத என்று …..

வீணையின் நாதம் போல் நான் என்றும் உனக்கு …..
சங்கதி இல்லாமல் சங்கீதம் எதற்கு ………..
என் காதலை ஏற்று கொள்ள மனம் இல்லை உனக்கு …………
நான் மட்டும் இனி வாழ்வது எதற்கு……….

எழுதியவர் : ரேவதி ஐஸ் (11-Feb-16, 6:21 am)
சேர்த்தது : ரேவதி ஐஸ்
பார்வை : 109

மேலே