திறந்தவெளிக் கழிப்பிடங்கள்
ஆறாம் அறிவை ;
அடகுவைத்த -
அறிவை இழந்த ஜென்மங்களே !
மதிகெட்டு போனதாலே ;
மதங்களின் ஓவியங்களும் -
மனதில் பதியவில்லையோ !
கண்ணியம் மறந்தோரே ;
காவல் துறை விளம்பரங்களும்-
கண்ணில் படவில்லையோ !
சிறுநீர் நீ கழிக்க !
சீரழிவு உன் பிள்ளைக்குத்தானே !
சிந்தனை செய் மானிடா !