நாள்கள் உள்ளது
உனக்காய் வாங்கிய
பூக்களை சேகரித்திருந்தால்
நான் ஒரு பூ கடை இட்டுருப்பேன்!
ஆனால் தினமும் கருகியே போனது!
வாங்கிய பூக்கள்!
உனக்காய் எழுதிய கவிதையை
புத்தகமாய் இட்டுருந்தால்
நான் ஒரு கவிஞனாக வந்திருப்பேன்!
ஆனால் மக்கியே போனது
எழுதிய கவிதைகள்!
உனக்காய் அழுத கண்ணீரை
சேகரித்திருந்தால்
நாட்டிற்க்கு ஒரு நதியையே
தந்திருப்பேன்!
ஆனால் உன் காலடியில் எல்லாம்
கொட்டியே வீணானது!
உனக்காய் அழகான ஆடை
வாங்கிய பணத்தை சேகரித்திருந்தால்
நான் வெளிநாடே சென்றிருப்பேன்!
ஆனால்,உடுத்திய ஆடையும்
காலப்போக்கில் கிழிந்தன!
உனக்காய் வாங்கிய
மோதிரத்தை சேகரித்திருந்தால்!
நான் அனைத்து கிறித்துவ கல்யாணத்திற்க்கு பரிசாய் வழங்கியிருப்பேன்!
ஆனால் நீ எரிந்த மோதிரத்தை
எடுக்க மனமில்லாமல் விட்டுவிட்டேன்!
எல்லாம் போகட்டும் பெண்ணே!
இன்னும் இருக்கிறது!
நிதானமாக பதில் சொல் பெண்ணே!
இன்னும் இரண்டு நாள்கள் உள்ளது!
பிப்ரவரி 14 வர!