குடையின் ஆதங்கம்

குடையின் ஆதங்கம் !
வெயிலில் !
கறுக்காமலிருக்க
என் நிழலில் நீங்கள்

மழையில்
நனையாமலிருக்க
எனக்குள் நீங்கள் !

வீட்டிலிருந்து
வெளியே போகையில்….
மறக்காமலும்….!
திரும்பும்போது
மறந்து விடுகின்ற
உங்களுக்கு

நினைவூட்ட
என்னதான் செய்வது
நானாகிய குடை !

---- கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (11-Feb-16, 8:12 pm)
பார்வை : 116

மேலே