இன்னும் ஒரு பொழுது விடியும் வரை

வாசலில் தென்றல் வந்து
---------------கதவை தட்டுது !
சாளரத்தின் மருங்கினில்
---------------பூக்கள் சாய்ந்தாடுது !
பூக் கிளைகளில் பூங்குயில்கள்
---------------கீதம் பாடுது !
வானமெல்லாம் நீலம்
---------------விரிந்து கிடக்குது !
கீழ் வானில் செங்கதிர்கள்
---------------விரிந்து விட்டது !
இளவேனில் பொழுது இங்கே
---------------விடிந்து விட்டது !
இன்னும் ஒரு பொழுது விடியும் வரை
---------------நீயும் காத்திராதே !
இப்பொழுதே உன் எண்ணத்தை
---------------எழுத்தினில் நீயும் பதிந்துவிடு !

------கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (10-Feb-16, 9:37 am)
பார்வை : 245

மேலே