அக்கம் பக்கம் வெக்கம்
..."" அக்கம் !!! பக்கம் !!! வெக்கம் !!! ""...
தமிழோடு விளையாட
உறங்காத கனவுகள்
அழகில் பேதமில்லை
அன்பின் போதையிலே
ஆசைகள் தீரவில்லை
ஆவலது கூடையிலே
அருகாமை தூரமாகி
விழிகள் நெருக்கமாகி
பழகித் தர(வா)யில்லை
பக்கம் தான் வர(வா) ,,,
வெக்கமாய் இருந்தால்
முத்தமாய் முடித்துக்கொள்
வேடிக்கை பிடித்திருந்தால்
லாவகமாய் பயின்றுகொள்
தாகமாய் இருப்பதனால்
மோகத்தால் மூடிவிடு
மொத்தமும் ஆடையிலே
ஆடைகளும் தானெதற்கு
போதும் இதுவென்றால்
போகட்டும் விட்டுவிடு ,,,
விடவா நான் விட்டுவிடவா
தொடவா தொடர்ந்திடவா
கள்ளமாய் பிடித்துவைத்த
வீராய்ப்பை தட்டிவிட்டு
வித்தகச்சொல் கேட்டுவிடு
வீண் பிடிவாதம் விட்டுவிடு
உச்சியை தீண்டிவிட்டாய்
உள்ளங்கால் வாராயோ
மெல்லவே படிப்படியாய்
பத்திரமாய் இறங்கிவிடு ,,,
உன் பள்ளம் மேடுகளில்
பத்திரமாய் கடந்துவர
திசையை மாற்றிக்கொண்டு
திக்குத்தெரியா விளையாட
திண்டாடும் மனம்ரெண்டு
கொண்டாடும் அதைக்கண்டு
இயற்கையது மாறாது
முடிந்தவரை போராடு
விதையின் போராட்டம்
விதியின் வெற்றியன்றோ ,,,
என்றும் உங்கள் அன்புடன் ,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...