காதலர் தினம்
நேரமில்லாதவர்கள்
நேரம் கொள்ளாதவர்கள்
நேரம் கொள்ள அனுசரிக்க ஒரு நாள்
நேரமின்றி எல்லா
நேரமும் காதல் கொள்ளும் நமக்கும்
வேண்டுமா ஒரு தினம்
நேரம் எவ்வளவு இட்டாலும்
நேர்த்தியாக கொண்டாட
நேசம் நல்கொண்டு
நெகிழ்ச்சியுடன் நெஞ்சிலுள்ள
நேர்மையான காதலுடன்
நேராக சென்று வாழ்த்த
வேண்டும் காதலர் தினம்
- செல்வா