காதல்

காதல் பல நல்லர்வர்களை உருவாக்கியது
பல மன நோயாளிகளை உருவாக்கியது
பல பல கவிஞர்களை உருவாக்கியது

உண்மையில் இங்கே பலருக்கு காதலிக்க தெரிய வில்லை
காதல் என்பது இங்கு பலருக்கு உடலின் தீர்வு
சிலருக்கோ காதல் என்பது ஆன்மாவின் நேசம்

பெற்றவள் பிள்ளையின் மீது வைப்பதும் காதல் தான்
பிள்ளை பெற்றவள் மீது கணவன் வைக்கும் அன்பும் காதல் தான்
பதின் பருவ காதல்
இங்கே ஊடகத்தால் தவறாக விதைக்க பட்டு
அவர்கள் நெஞ்சில் நஞ்சாய் மாறுகிறது

நிஜமான காதல் எதிர்பார்ப்பு இல்லாதது
ஆணவம் இல்லாதது
காரணங்களின்றி சண்டை இட்டு சண்டையிட்டு
இதையத்தை நோக செய்யதது ..

காதல் . கடவுளின் வரம்
காதல் வாழ்வதின் வழிகாட்டி
கனவுகளை நினைவேற்ற வைக்கும்
கலை காதலுக்கு மட்டுமே உண்டு

ஆதலால் நண்பர்களே காதல் செய்வீர்

காதலர் தின வாழ்த்துக்கள்

எழுதியவர் : பிரபு (14-Feb-16, 8:37 pm)
சேர்த்தது : ந வா பிரபு
Tanglish : kaadhal
பார்வை : 200

மேலே