ஸ்டிக்கர் பொட்டு சின்னராசு

என்னடா நம்ம பெட்டிக் கடை சின்னராசுவை எல்லாம் ஸ்டிக்கர் பொட்டு சின்னராசு - ன்னு சொல்லறாங்க?

டேய் சின்னராசுவை பெட்டிக்கடைக்காரர்னு தப்பா நெனைச்சுக்காதே. அவரு பினாமி பேருல வீட்டு மனை (ரியல் எஸ்டேட்) வர்த்தகம் பண்ணிட்டு கொடி கோடியா சம்பாதிச்சு வச்சிருக்காரு

அது சரி . அவுரு எப்பிடி ஸ்டிக்கர் பொட்டுக்காரர் ஆனாரு?

நம்ம பகுதில குடுத்த இலவச பொருள்களில் இருந்த ஸ்டிக்கர்ங்க எல்லாத்தையும் சேகரிச்சு வச்சிட்டு அதிலே ஒண்ண எடுத்துத் தன்னோட நெத்தில ஒட்டிக்கறாரு. அந்தப் பொட்டோட தெனம் நம்ம தொகுதியைச் சுத்திச் சுத்தி வர்றாரு. கட்சித் தலைமை நிலையத்துக்கும் அந்த ஸ்டிக்கர் பொட்டோட தினம் போய்ட்டு வர்றாரு.

ஆமாம் இதெல்லாம் எதுக்குச் செய்யறாரு?

அட என்னப்பா நீ ஒண்ணுந் தெரியாத மாதிரி கேக்கற?

தேர்தல நிக்க ஒரு தொகுதி கெடைக்கும்னுதான்.

பொழைக்கத் தெரிஞ்ச மனிதர்டா ஸ்டிக்கர் பொட்டு சின்னராசு.

எழுதியவர் : மலர் (15-Feb-16, 9:32 am)
பார்வை : 254

மேலே