காதல் ஒரு விஷம் என்கிறாய்

காதல் ஒரு விஷம் என்கிறாய்
மருந்தும் விஷமாகலாம் அதிகம் பருகினால்
விஷமாவது மருந்தின் தவறா
அதிகம் பருகியது உனது தவறா

காதலை இருள் என்கிறாய்
உன் வாழ்வினை ஒளிமயமாக்க
கதிரவன் போல் அதீத ஒளியை அது வீச
கண்களை மூடி கொள்கிறாய் நீ
திறவாத விழிகள் இருளை தவிர வேறென்ன அறியும்

காதல் வெறும் காமம் என்கிறாய்
விலங்கில் இருந்து மனிதன் தனியாய் தெரிய
ஆறறிவை தந்தான் இறைவன்
உனக்கு ஏற்பட்டது அறிவு குறைபாடு
காதலை குறை சொல்லி என்ன பயன்

காதல் ஒரு பொழுதுபோக்கு என்கிறாய்
விலை மதிப்பில்லா காதலுக்காக
விலை மதிப்பில்லா பொழுதை கழிக்கிறான் மனிதன்
விலை பொருள் என காதலை நீ நினைத்தால்
விலகி நில்... உன் பொழுதை கழிக்க வேண்டாம்

காதல் ஒரு பைத்தியகாரனதனம் என்கிறாய்
உலகத்தின் கவலைகள் மறந்து
வாழ்கையின் அழகை மட்டும் ரசிக்க
காதலிப்பவன் பைத்தியகாரனாகவே இருக்கட்டும்
நீ உன் அறிவை கூர்மையாய் வைத்து கொள்
காதலை வசைபாட

காதலிப்பவர் காதலில் கலந்து தொலைந்து போகட்டும்
காதல் ஆழ்கடலினும் ஆழம் ஆகட்டும்
தயவு செய்து நீ மட்டும் மாறாதிரு
என் செய்வது???
சாத்தான் உள்ளவரை தானே
கடவுளை நோக்கி செல்லும் கூட்டம் அதிகரிக்கும்...!!!

எழுதியவர் : தண்டபாணி @ கவிபாலன் (15-Feb-16, 11:05 pm)
பார்வை : 84

மேலே