எண்டோமெட்ரோசிஸ் --- விழிப்புணர்வும் விளைவுகளும்

அன்பான ஏதுமறியா இளம்வயது பெண்களே !


* எண்டோமெட்ரோசிஸ் ( கருப்பை வீக்கம் ) உங்களுக்கு
இருந்தாலும் கவலை வேண்டாம் .
மகிழ்ச்சியும் இன்பமும் சற்றும்
குறையாமல் வாழலாம் ! வாருங்கள் !


* எண்டோமெட்ரோசிஸ் உங்களுக்கு இருப்பினும்
உங்கள் வாழ்வு சிறக்க ...
சில விஷயங்களைச் சொல்ல ஆசைப் படுகிறேன்
ஏதுமறியா இளம் பெண்களே !


* இனி நம் வாழ்வு வலி இல்லா வாழ்வு
என்று சொல்லுவோம் நாமெல்லாம் .
நம் எதிர்கால வாழ்வு பற்றி நமக்கு இனி
கவலையில்லை . ஆம் .. கவலையில்லை .


* உங்கள் வாழ்வு சில சமயங்களில்
இனிமையாக இருக்கும் .மிக நல்ல
விளைவுகளையும் உணர்வுகளையும் உண்டாக்கி
மகிழ்ச்சியையும் உண்டாக்கும் .


* உங்கள் மருத்துவரை நாடினால் சிறந்த
ஆலோசனைத் தருவார்கள் . உங்களைப்
பற்றியும் உங்கள் உடல் நிலையினைப்
பற்றியும் தெரிந்து கொண்டு சீராக்கிக் கொள்ளுங்கள் .


* உங்கள் உடல் நலன் பேணுதல் உங்கள்
ஒவ்வொருவரின் கடமையே ! எத்தனையோ
மோசமான நாட்களை நீங்கள் சந்தித்திருக்கலாம் .
சில நல்ல விஷயங்களும் உங்களை அடைந்திருக்கலாம் .


* இளம் பெண்களே ! கருப்பை வீக்கம் என்று
சொல்லப்படும் " எண்டோமெட்ரோசிஸ் " ஒரு பிரச்சினையே அல்ல .
இனி இது பற்றி மறந்து விட்டு
உங்கள் வாழ்க்கையை சகஜமாக எடுத்துக் கொள்ளுங்கள் .


* இளந்தளிர் போன்ற பெண்களே ! நீங்கள்
தனித்து விடப்பட்டவர்கள் இல்லை .
நாங்கள் உங்களுடன் இருக்கின்றோம் .
எங்கள் மீது நம்பிக்கை வையுங்கள் .!!!

என்றும் உண்மையுள்ள
உங்களின் சகோதரி .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (16-Feb-16, 1:09 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 51

மேலே