மனசெல்லாம் 10

{ முன் கதை சுருக்கம் : விடாமல் துரத்தும் சித்தார்த் ,காதல் என்ன என்று இன்றும் அறியாத ராதிகா }
சித்தார்த் சிறு வயது முதல் ராதிகாவை அறிந்தவன்.ஆனால் அவர்கள் பிரிந்த அந்த 7வயது முதல் அவளின் இந்த 15வரையிலும் அவளை பற்றி அறியாதவனாய் பின் தொடர்ந்தான்.

ராதிகா பள்ளியில் துரு துருவென இருப்பாள் அவளின் அண்ணன் தரும் பலவித உற்சாகம்,நம்பிக்கை,அறிவுரை அவளின் ஆர்வத்தை பெரிதாக்கி ஆடல்,பாடல்,விளையாட்டு,கவிதை என சிறக்க செய்தது.அவள் மிகவும் மகிழ்ச்சியாய் சுற்றி திரியும் பட்டாம்பூச்சி போல் திரிவாள்.பள்ளியில் அவளுக்கென நண்பர் கூட்டம் அதும் போதாதென பள்ளியில் உள்ள சிறுவர் முதல் 12ம் வகுப்பு அண்ணன்,அக்காகளும் இவளை நன்கு அறிந்தவரும் நேசிப்பவருமானர்கள்.

வகுப்பில் குறும்புகள் செய்து ஆசிரியரிடம் மாட்டுவாள்.ஆசிரியர்கள் அனைவரும் ஒரே மாத்திரமாய் " உன் அண்ணன் எங்கனம் படிக்கிறான் நியும் அவ்வாறு முதலிடம் பெற வேண்டும் " என்று.அது என்னவோ பல கலைகளில் ஆர்வம் உள்ள இவளுக்கு படிப்பில் விளையாட்டு தனம் தான்.வகுப்பில் உள்ள அனைவரும் இவள் நண்பர் தானே இருந்தும் ஒருவன் இவளிடம் மிகவும் நெருகிய நண்பனான். காரணம் அவளின் தோழியை அவன் காதல் செய்வதால்.

அவளின் தோழியை காதல் செய்ய ஏன் இவளிடம் நண்பரானான் காரணம் இவளுக்கு காதல் என்ற வார்த்தையே பிடிக்காது.இவளுடைய நண்பர்களும் இவளின் சொற்படி நடப்பர்.இவள் கூறுவதை மிருவதே இல்லை.அந்த அளவு பாசம் பகிரும் பெண் அவள்.அவளை இழக்கும் காதல் வேண்டாம் என்று அவளும் கூறி விடுவாளோ என்ற பயத்தினால் தான்.

இதனை அறியாத சித்தார்த் அவளின் நண்பனை காதல் செய்கிறாளோ என்று நினைத்து அவனை அழைத்து மிரட்டினான்.இதனை ராதிகா அறிந்து செய்வதறியாது நீ இனி வேறு வழியாய் வீடு செல்,என்னை மன்னித்துவிடு என்று நண்பனிடம் மன்னிப்பை வேண்டினால்.ஒரு நிலையில் அவளின் வகுப்பின் மணாவர்கள் அனைவரும் காதல் செய்ய தொடங்கி காதலில் திளைத்து இருந்தனர்.ராதிகா மற்றும் அவளின் இரு தோழிகளை தவிர அனைவரும் காதலில் திளைக்க காதலை வெறுக்கும் ராதிகாவை வெறுக்க தொடங்கினர்.

இருந்தும் ராதிகா மனமுடையாது தனக்கான தோழிகளுடன் மகிழ்ச்சியாக தான் இருப்பாள்.கோபம் எதுவும் அவளின் மனதில் தங்காது யாவரையும் அன்போடே அனுசரிப்பால்.காதலர் தினம் நெருங்கும் நேரம் வகுப்பின் மாணவர்கள் காதலை பரிமாற்றி பரிசுகளை பகிர்ந்து கொண்டனர் பள்ளியிலே.ஆசிரியர் வருவதை அறிந்த ராதிகா வகுப்பினுள் செல்ல இதனை கண்டு தலையில் அடித்தவாறு ஆசிரியர் வருகிறார் என்று உரக்க கூறினால்.அனைவரும் தங்களின் இடத்தில் அமர்ந்தனர்.

பள்ளி முடிந்தது நாளை காதலர் தினம் சனிகிழமை ஆதலால் பள்ளி விடுமுறை.ராதிகாவும் அவளின் தோழி இலையாவும் விடுமுறையின் காரணமாக கோவில் சென்றனர்.செல்லும் வழியில் சித்தார்த்.இலையா பேசியவாறு அருகில் உள்ள ராதிகாவை கவனியாது நடந்து செல்ல சித்தார்த் ராதிகாவின் கைகளை பிடித்து இழுத்தான்.ராதிகா இலையா இலையா என்று அலற ......

நாளை காண்போம் ...

எழுதியவர் : ச.அருள் (16-Feb-16, 2:04 pm)
பார்வை : 349

மேலே