எனக்காக பிறந்தவளா 10

Episode 10 : எனக்காக பிறந்தவளா ???

வசந்தின் தூக்கக்கண்கள் அவலோடு இருந்தது . அவன் கண்மூடிக்கொண்டு காதலியின் சிந்தனையோடு அறை தூக்கதில் இருந்தான் . ஒரு சின்ன சத்ததில் அவனது mobile அதிர்ந்தால் கூட அதை முழு வேகத்தில் எடுக்க அவனது காதல் உணர்வுகள் மட்டும் விழித்துக்கொண்டு இருந்தது . படுத்துக்கொண்டு படுக்கையை தடவினான் mobile-i கையில் சிக்கியது கண்திறந்து பார்த்தான் . அவளிடம் இருந்து ஒரு SMS வந்திருக்காத என்ற ஏக்கம் அவனிடம் இருந்தது .

நேற்றய watsapp msg-ai மீண்டும் ஒருமுறை படிப்பதில் சுகம் இருந்தது . mobile அதிர்ந்தது அவல் மறுபடி வழித்தது, விரைந்து பார்த்தான் . msg மைதிலியிடம் இருந்து .

"Good morning dear " . அவளது இந்த அன்பு இன்றைய விடியலை தன் மனதில் முழு வெளிச்சம் மூட்டியது . இந்த ஒரு SMS போது இன்றைய நாளை அழகுப்படுத்த .
எழுந்து உட்கார்ந்தான் , சிரித்தான், எழுத்துகளை ரசித்தான் மீண்டும் சிரித்தான் . எதற்கு முத்தம் தருவது என்ற தடுமாற்றம் இருந்தது .

தன் கொள்ளை ஆசையை " Good morn too dear " என்று பதிபித்து அனுப்ப, இன்றைய வட்டார சொற்கள் குளியலில் துவங்கி பேருந்து வரை பயனித்தது . அவனது முழு கவனமும் அவளுடன் chat செய்வதற்க்கு திசைதிருப்பட்டது . நொடிக்கு நொடி mobile-ai பார்ப்பதற்க்கு கூட அவனிடம் காரணம் இருந்தது . நந்தினி fancy -யின் வெளிபுறத்தில் இருந்து ஒரு சிரிப்பு, ஆடையை பற்றின பகிர்வுகள், புதுமையாக இருந்தது . ஒரே நிற ஆடையை அணிந்ததில் ஆனந்தம் இருந்தது .

சில நேரங்களில் அவளின் தாமதம் வசந்த்தை ஒரு பாடுபடுத்தியது ஆனாலும் அதுவும் ஒருவகையில் காதலை பலப்படுதியது . " சாப்டியா " " had breakfst " பல பரிமானங்களில் இன்று நாலவது முறை ஆனாலும் அறுக்கவில்லை ஒவ்வோரு முறையும் காதலை ஊட்டியது . Bus- எறியதும் தெரியவில்லை இறங்கியதும் தெரியவில்லை . class- உள்ள ஒருவரிடமும் கவனம் துளிகூட செல்லவில்லை .

நண்பர்கள்வுடன் இன்றைய நாளை கொண்டாட ஆர்வம் இருந்தது, கவனம் நிமிடதிற்க்கு ஒருமுறை அவளின் பதிலை பற்றின சிந்தனையில் கழிந்ததில் யாரிடமும், தன்போல் பேசிக்கொள்ள முடியவில்லை .

" வசந்த் என்னடா ஆச்சு உனக்கு ரொம்ப மாறிட டா, எங்ககிட்ட பேசகூட உனக்கு time இல்ல இல" என்றான் ரவி .

Mobile ஸ்ஸ்க் என்று சத்தமிட (எவ்ளோ girls உனக்கு propose பண்ணியிருக்காங்க)மைதிலி . அவன் திரையில் .

(யாருமே இல்ல மைதிலி, உனக்கு யாருன propose பண்ணாங்களா?? ) வேகமாக கட்டைவிரல் பணிபுரிந்தது " என்ன ரவி" என்று கேட்டுக்கொண்டு .

" சரி நீ ரொம்ப busy இருக்க அவகிட்ட பேசிமுடிச்சுட்டுவா " - ரவி .

ஸ்ஸ்க் ( வசந்த், நான் அவ்ளோ அழுகு இல்ல . ப்ட் நிறைய propose பண்ணுவாங்க ) .

( பார்றா )என்று தட்டிக்கொண்டு " இரு மச்சி " . தட்டும் போது ஒரு வலி இருந்தது அது இந்த இருவருக்கும் தெரியாது .

" டேய், phone ah off பண்ணிட்டு பேசுட ஏன்ன மாயிரு மாரி பண்ணிட்டு இருக்க " வலிமையாக அவனிடம் இருந்து phone-ai பிடிங்கிகொண்டான் .

ஸ்ஸ்க் , ஒலி சத்தம் . பரிதவிப்பு அவனுள் வந்தது .

" மச்சி phone ah கொடுடா, சரி சொல்ட நா matterறு "

" நாளைக்கு சரக்கு அடிக்க போறோம் வரயா? இல்லயா ? "

ஸ்ஸ்க் சத்தம் மீண்டும் .

" ok போலாம், phone ah தா "
" நாளைக்கு நீ mobile use பண்ணகூடாது, ok வா " என்றான் ரவி .

" நாங்க எங்க வசந்த் கூட சரக்கடிகனும் " - நவீன் .

" ok da" mobile-ஐ வாங்கி கொண்டான் .

" நவீன் நம்ம போலாம் " ரவி .

" ok bye da " அவர்கள் பிரிந்தார்கள் .
அவன் திரையில் .
"hm"
"then"
Bus stand வரை அவனுக்குள் காதலியின் முதல்வலி இருந்தது .

Bus எதிரில் வந்தது கூட்டம் இல்லை தனியாக உட்கார இடம் கிடைத்தது .

" I got bus, return to my home now " - வசந்த

"சே! நான் 7 வரைக்கும் இங்க தா இருக்கனும் boring வசந்த் " - மைதிலி

"ப்ட்! நாளைக்கு நான் frieds கூட outing போவனே " - மைதிலி

" yeah ! நானும் நாளைக்கு friend கூட வெளிய போவ "
" Enjoy Enjoy " - மைதிலி
" 100% enjoyment இருக்கும் "

" நீங்க யாருலாம் போவிங்க " - வசந்த் .

" நான் பூஜா, பல்லவி,ப்ரியா, பவ்யா & அவங்க லவ் பண்ற பாசங் " .

" ம்! எங்க போவீங்க ? " - வசந்த் .

அவள்மேல் அக்கறை அதிகரித்தது ஒரு வித பயம் அவளை தனியாக அனுப்புவதில், தன்னையும் கூப்பிடுவாள் என்று நினைத்தான் . சில நிமிடங்களில் அது ஆர்வமாக மாரியது . ஆனால் தன் நண்பர்களிடம் சொன்ன வார்த்தைகள் என்ன ஆவாது என்ற யோசனை விடையில்லாமல் இரவுவரை தொடர்ந்தது . அவளிடம் பதிலெதும் கடந்த இரண்டு மணிநேரமாக இல்லை இன்னுமும் இல்லை . அவன் சிந்தனைகள் பல இடங்களில் அலைந்தது, காத்திருந்தது அவளின் பதில் என்னவாக இருக்கும் என்ன இருந்தாலும் அதை எற்க்கு நிலையில் ஒரு msg போதும், msg-காக தவித்துகொண்டிருந்தது .

இன்றைய நாளை நினைக்க தோனியது . வாழ்வில் இதுவரை தன்னை பற்றி எந்த பெண்ணிடமும் எவ்ளோவு பேசினது இல்லை, யாரை பற்றியும் இத்தனை தெரிந்து கொண்டதும் இல்லை . ஒரு பெண் தன் முழு நாளையும் அவனுடன் பேசிக்கழித்தது சொல்ல முடியாத சந்தோஷத்தை அவனுக்கு தந்தது . சிரிப்பாக இருந்தது சில கேள்விகள், சிலவை சுவாரசியமாக இருந்தது . மீண்டும் மீண்டும் படித்ததில் அடுத்தடுத்த வரிகள் படிக்கும் முன்பே கவனத்தில் வந்து நெஞ்சை குளிர செய்தது .

தொடரும் . . . .

எழுதியவர் : கவி தமிழ் Nishanth (16-Feb-16, 11:25 am)
பார்வை : 325

மேலே