பெண்மையும் தாய்மையும்

{ கணவன் மனைவி - இல்லற வாழ்க்கை சிறக்க }
"புரியாத புதிர் பெண்மை" என்னும் உலகிற்கு,
புரியும்படி சொல்கிறேன்.
பெண்மையது பெண்ணிற்கே புரியாத புதிர் தான் - காரணம்
பெண்மையில் புரிந்துக்கொள்ளத்தக்க ஏதும் இல்லை,
பலவீனம் என்பதொன்றே உள்ளது பெண்மையில்,
அப்பொழுது பெலவீனத்தை அறிந்து பயனேது ?
பின்பு எங்கனம் புரிதலால் வாழ்கையை நடத்துவது ?
பலவாறு சாதிக்கும் பெண் பலவீனமானவர்களா ?
பார்வையின் திகைப்போடு கேட்க தோன்றுமே சரியா ?
பலத்தோடு செயல்படுதலை நீங்களே சில நேரம் கண்டிருக்கலாம்,
பலவீனம் என்ற பெண் அல்ல,
பெண்ணுக்குள் மறைந்திருக்கும் தாய்மை தான் அந்த பலத்திற்கு காரணம்,
பெண் படைக்கபட்ட விதமே அன்பிற்கு ஏங்கும் வண்ணம் தான்,
பெண்மை எதிர்பார்ப்பது அன்பு மட்டுமே,
பாசம் அதை நீ விதைத்தால்,
புரிதலுடன் நேசமும் விளையும் தாய்மையாக மாறி,
விதைக்கும் விவசாயி கணவன்,
விளைச்சலின் நிலம் மனைவி - நல்ல
வித்து என்று சொல்ல காரணமும் இதுவே,
விளைச்சலில் குறை அல்லது சரியில்லை என்றால்,
விதைத்தவனிடமே தவறு உள்ளது நிலத்திடமல்ல,
விதைப்பவன் மிகவும் அறிவோடு நல்லனவைகளை விதைத்தால்,
விளைவதும் நலனவாகும்,
விதைப்பவன் விதைக்கும் விதை மறைவானாலும்,
விளைச்சல் அதை தருவாள் வெளியரங்கமாக,
விதைத்த விதை விதையாகவே விளையாதே,
விதைததினிமித்தம் விளைந்த ஒன்றையே அறுப்பாய் - அவ்வாறே
விதைத்த உன் விதை உனக்கு விதையாக அல்ல,
விளைந்த மற்றொன்றாக உன்னகே தருவாள்,
சொல்கிறேன் சிந்தியுங்கள் கணவன் வாங்கி தரும்,
சமையல் பொருள்களை அவ்வாறே உணவின் போது,
சமர்பிப்பவள் பெண்ணல்ல,
சமையல் பொருள்களைக்கொண்டு - அவள்
சமைத்த ஒன்றையே தருவாள்.
சில காலம் முன் விளையாட்டாய்,
சொன்ன வார்த்தையும் நினைவில் கொண்டு,
வேதனையோடு கோபம் கொள்வாள் பேசாது,
சினத்தின் காரணம் தேடி நீ அலைந்து திரிய,
சிறிதளவும் மாற்றமின்றி கூறியதை கூறி,
சிந்தனையால் விதைத்தனிமித்தம் விளைந்த கேள்விகளையும்,
சிதறி வெடித்து கொட்டி தீர்ப்பாள்,
சொன்ன சொல்லை நீயே மறந்தாலும்,
[ விதைத்த நீயே அதை மறந்தாலும் ]
சிறிதும் மறக்காது உன்னிடமே திருப்பி தருவாள்.
[ நிலமவள் மறக்காது விளைந்ததை உன்னிடமே தருவாள் பயனாக ]
சினத்திற்கும்,நேசத்திற்கும் காரணம் யார் ?
சிந்தியுங்கள் நிலமா ? விதைத்தவனா ?
பலவீனத்தை கொண்டு வாழ்வது கடினம் தான்,
பலமாக மாற்ற வழிகள் உண்டு,
பாசம் நேசம் வீசி விதைத்தால்,
புரிதலும் பணிதலும் தானே விளையும்,
பலம் கொள்வாள் தாய்மை கொண்டு,
பலவீனம் பெண் என்றால் - எதிர்
பலம் பெண்ணிற்குள் மறைந்திர்க்கும் தாய்மை.
அவளை பெண்ணாகவே நீ பார்க்கும் வண்ணம்,
அவள் பலவீனமானவள் தான்.
அவளினுள் விதைக்கும் விதைகளின் நேசம்,
அவளின் பலமான தாய்மையை வெளிக்கொண்டுவரும்.
தாரமான வரை உள்ள பலவீனம்,
தாய்மையில் மாபெரும் பலம் பெறும்,
தன்னாலே குழந்தையாவான் பெண் அவள் முன்னே காரணம்,
தாரமான பெண் தாய்மையானது தான்.
தனித்திருக்கும் கோழி பயப்படும் யாவரையும்க்கண்டு,
தாய்மையோடு தன் குஞ்சுகளுடம் இருக்க,
தயங்கிய கோழியே சீறி எழும் அதுவே "தாய்மை".
புரியவில்லை பெண் என்னும் கணவர்களே,
பாசம் மட்டுமே எதிர்ப்பார்க்கும் பெண்மையை,
அறிந்து அறிவோடு நீ விதைக்கும் விவசாயியானால்,
அன்போடு இல்லறம் செல்லும் நல்ல விளைச்சளோடு !!!
பெண்மையினுள் தாய்மை !